பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம் 17

வாறு திருப்பணிகளைப் புரிந்து கொண்டு வரும் கால த்தில்." பாடல் வருமாறு:

வைகலும் உணவிலாமை மனைப் படப்பை யினிற் டிக்கு நைகரம் இல்லா அன்பின் கங்கைகை அடிகு கொய்து பெய்கல்த் தமைத்து வைக்கப் பெருந்தகை அருந்தித்

தங்கள செய்கடன்முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில்." இந்தப் பாடல் குளகம். வைகலும் - ஒவ்வொரு

நாளும். உணவு-தாயனார் தாம் உண்ணுவதற்கு உணவு. இலாமை-இல்லாமையால், இடைக்குறை. மனை-தம்மு டைய திருமாளிகையின் பின்னால் உள்ள. படப்பையினில்தோட்டத்துக்குள் புக்கு-நுழைந்து. நைகரம்-வருந்துதல்: "குறைதல்' எனலும் ஆம். இல்லா-இல்லாத. அன்பின்பக்தியோடு. அடகு-இலைகளை; ஒருமை பன்மை மயக்கம். கொய்து-பறித்துக் கொண்டு வந்து. நங்கைதம்முடைய பத்தினியினுடைய கை-கைகளில் அவற்றை அளித்து: ஒருமை பன்மை மயக்கம். பெய்-அவள் அவற்றை வாங்கிக் கொண்டு சமைக்கும். கலத்துபாத்திரத்தில், அமைத்து-வைத்துச் சமைத்து. வைக்கதம்முடைய கணவருக்குப் பரிமாற. ப்:சந்தி. பெருந்தகைபெருமையையும் தகுதியையும் பெற்றவராகிய தாயனார். அருந்தி-அவற்றை உண்டு. த், சந்தி.தங்கள்-தங்களுடைய. செய்-புரியும். கடன்-கடமை. முட்டாவண்ணம்-தவ றாதவாறு. திருப்பணி-திருப்பணிகளை ஒருமை பன்மை மயக்கம். செய்யும்-புரிந்து கொண்டுவரும். நாளில்காலத்தில். -

பிறகு வரும் 13-வது பாடலின் கருத்து வருமாறு: * தம்முடைய திருமாளிகையின் பின்பக்கத்தில் உள்ள. இலைகள் இல்லாமற் போக வடக்குத் திசையில் உயரமான வானத்தில் உள்ள நட்சத்திரமாகிய அருந்ததியைப் போன்றவராகிய தாயனாருடைய பத்தினியார் குளிர்ந்த