பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாய்னார் புராணம் 219

களையும் அவர்களுடைய தி ரு வ டி களி ல் விழுந்து வணங்கினார்; தெய்வத் தன்மை வாய்ந்தவர்களும், இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவர்களாகிய அந்தத் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களும் நெருப்பை மூட்டி அமைத்த விதத்தை நந்தனாரிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்கள். பாடல் வருமாறு: - -

ஐயரே, அம்பலவர் அருளால்இப் பொழுதணைந்தோம்: வெய்யஅழல் அமைத்துமக்குத் தரவேண்டி' எனவிளம்ப நையுமனத் திருத்தொண்டர், "நான் உய்ந்தேன்' எனத்

, * . . . தொழுதார்
தெய்வமறை முனிவர்களும் தீயமைத்த படிமொழிந்தார்." - ஐயரே அம்பலவர்-ஐயரே, பொன்னம்பலத்தில் திரு நடனம் புரிந்தருளும், நடராஜப் பெருமானார். அருளால்-திரு வரய் மலர்ந்தருளிச் செய்ததால். இப்பொழுது-இந்தச் சமயத் தில். வெய்ய-வெப்பமான, அழல்-நெருப்பை அமைத்து. முட்டி அமைத்து முட்டி எரியச் செய்து. உமக்கு: தேவரீருக்கு. த்: சந்தி. தர-அளிக்க. வேண்டி-விரும்பி. அணைந்தோம்-நாங்கள் தில்லை வாழ் அந்தணர்களாகிய மூவாயிரம் பேர்களும் தேவரீரிடம் வந்து சேர்ந்தோம். என-என்று இ ைடக் குறை. விளம்ப-திருவாய் மலர்ந் த்ருளிச் செய்ய, நையும்-உருக்கத்தை அடையும். மன. திருவுள்ளத்தைப் பெற்ற, த்: சந்தி. திருத்தொண்டர்-திரு தொண்டராகிய அந்த நந்தனார். நான்-அடியேன். உய்ந்தேன்.உஜ்ஜீவனத்தை அடைந்தேன். எண்-என்று திரு வாய் மலர்ந்தருளிச் செய்து விட்டு; இடைக்குறை. த்:சந்தி. தொழுதார்.அந்தத் தில்லை வாழ் அந்தணர்கள் மூவாயிரம் பேர்களையும் அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்கி னார். தெய்வ தெய்வத் தன்மை வாய்ந்தவர்களும்; திணை மயக்கம். மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும்