பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.222 பெரிய புராண விளக்கம்-5

பொய்தகையும் உருவொழித்துப் புண்ணியமா முனி . そ ... ... வடிவாய மெய்திகழ்வெண் ணுல்விளங்க வேணிமுடி * -

- - கொண்டெழுந்தார்.” கை-அந்த நந்தனார் தம்முடைய கைகளை ஒருமை :ப்ன்மை மயக்கம். தொழுது-கூப்பிக் கும் பிட்டு வணங்கிவிட்டு. நடமாடும்-நடராஜப் பெருமானாருடைய திருநடனம் புரிந் தருளும். கழல்-வெற்றிக் கழலைப் பூண்ட திருவடிகளை; ஆகுபெயர். உன்னி-தியானம் செய்து கொண்டே, அழல்நெருப்புக்குள். புக்கார்-இறங்கினார். எய்திய-அ வ்வாறு அந்த நெருப்புக்குள் இறங்கிய. அப்பொழுதின்கண்-அந்தச் -சமயத்தில், எரியின்கண்-அந்த நெருப்பில். இம்மாய-இந்த மாயமான. ப்: சந்தி. பொய்-பொய்யை. தகையும்-உடைய தாக விளங்கும். உரு - பறைய ரு டைய திருவுருவத்தை. ஒழித்து-போக்கி விட்டு. ப்:சந்தி. புண்ணிய-புண்ணியச்செயல் களைப் புரிந்த ஒருமை பன்மை மயக்கம். மா-பெருமையைப் பெற்ற முனி-ஒர் அந்தணனுடைய. வடிவாய்-திருவுருவத் தைப்பெற்றவ்ராகி; திணை மயக்கம். மெய்-தம்முடைய திரு மேனியில், திகழ்-விளங்கும். வெண்-வெண்மையான. நூல். பூனூல். விளங்க-திகழ வேணி முடி-தம்முடைய திருமுடியின் மேல் சடாபாரத்தை. கொண்டு-பெற்றுக் கொண்டு. எழுந் .தார்-அந்த நெருப்புக் குண்டத்திலிருந்து எழுந்து வந்தார்.

பிறகு வரும் 33-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: "அந்த நந்தனார் சிவந்த நெருப்பின் மேலிருந்து எழுந்து வரும் சமயத்தில் செந்தாமரை மலரின் ம்ேல் வந்து தோன் றிய பிரம் தேவனாகிய வேதியனைப் போல அந்த நாயனார் தோற்றத்தை உடையவராக விளங்கினார்; வானத்திலிருந்து தேவர்கள் முழக்கிய துந்துபி வர்த்தியங்களின் இனிய கீத நாதம் வந்து எழுந்து கருமையான ஆகாயத்தில் கேட்டது: தேவர்கள் மகிழ்ச்சியை அடைந்து ஆரவாரத்தை எழுப்பி பசுமையான மலர்க் கொத்துக்களைக் கொண்ட ம்ந்தார