பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பெரிய புராண விளக்கம்-5

நிலவிய-இருக்கிற வாழ்வினால்-வாழ்க்கையினால். அங்அழகிய. கண்-இடத்தைப் பெ ற் ற. வான்-ஆகாயத்தின். மிசை-மேல். அரம்பையர்-தெய்வலோகப் பெண்களாகிய அரம்பையர்களினுடைய கரும்-கருமையாக விளங் கும். குழல்-கூந்தல்களில். சுரும்பு-குடிய மலர்களில் மொய்க்கும் வ ண் டு க ள்: ஒருமை பன்மை மயக்கம். பொங்கு-அழகு பொங்கி எழும். பூண்-அணிகலன்களை அணிந்க. அவையா வன: காசு மாலை, முத்து மாலை, இரத்தின மாலை, உரு த்தி ராக்க மாலை, மலர் மாலை முதலியவை. முலை-கொங்கை களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி, கொடிச் சியர்-குறமகளிர்களினுடைய. குழல்-கூந்தல்களில்; ஒருமை பன்மை மயக்கம். மூழ்கி-முழுகி. ப்: சந்தி, போகா-செல்லா. ச்: சந்தி. . . அடுத்து வரும் 13-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அந்தத் தொண்டை நாட்டில் விளங்கும் வளங்களைப் பெற்ற குறிஞ்சி நிலத்தில் பாக்கியம் வேறாகச் சுற்றிவரும் தேவர்களும் தெய்வலோகத்துப் பெண்மணிகளாகிய அரம் பையர்களும் திருவவதாரம் செய்தருளி தங்களுக்கு ஒப்பு வேறு யாரும் இல்லாத வேடர்களும் வேட்டுவச் சாதிப் பெண்மணிகளுமாகவே உருவங்களை எடுத்து வந்து இடைச் சுரநாதரைப் பணியும் கங்கையாறு தங்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற தலைவராகிய ஞானபுரி சர் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருவிடைச் சுரம் என்னும் சிவத்தலமும் சொல்லப்படும் மேம்பாட்டில் மிகுதியாக விளங்குவது. பாடல் வருமாறு:

பேறுவேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து மாறில் வேடரும் மாதரு மாகவே வணங்கும் ஆறு சூழ்சடை அண்ணலார் திருவிடைச் சுரமும் கூறு மேன்மையின் மிக்கதக் நாட்டு வண்குறிஞ்சி." அந்நாட்டு-அந்தத் தொண்டை நாட்டில் உள்ள வண்