பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம் 23

பங்களை ஒருமை பன்மை மயக்கம். தீர்த்து-போக்கியருளி. ஆள்-அடியேனை ஆட்கொள்ள. வல்லார்-வல்லவராகிய சிவபெருமானார். அமுது செய்தருளும்-திருவமுது செய் தருளும். அப்பேறு-அந்தப் பாக்கியத்தை. எல்லை-வரம்பு. இல்-இல்லாத்; கடைக்குறை. தீமையேன்-தீவினைகளைச் செய்த அடியேன். தீமை ஒருமை பன்மை மயக்கம். இங்கு. இந்தத் தரைப்பிளிப்பில் எய்திட-அடைய, ப்:சந்தி. பெற்றிலேன்-பெறவில்லை. என்று-என வருந்தி. ஒல்லையில்விரைவில். அரிவாள்-ஓர் அரிவாளை. பூட்டி-வைத்து. ஊட் டியை-தம்முடைய கழுத்தை. அரியலுற்றார்-அந்தத் தாய னார் அறுத்துக் கொள்ளலானார்.

பிறகு உள்ள 17-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அடியேனை ஆட்கொள்ளும் ஐயராகிய சிவபெருமா னார் இந்தத் தரைப்பிளப்பில் திருவமுது செய்திலாரோ?' என்று வருந்தித் தம்முடைய கழுத்தில் வைத்த அரிவாளைப் பிடித்துக் கொண்டு குற்றம் அறுமாறு கலந்திருக்கும் பக்தி யைக் காண்பித்த வழியில் உள்ளே உள்ள பெருநரம்பு அறும் வண்ண்ம் தம்முடைய கழுத்தினோடு விழுங்குவதற்கு உரிய இடமாகிய முடிச்சையும் அறுத்து நின்று கொண்டிருந்த தாயனார் தமக்கு வந்த இந்த மனிதப் பிறவியை அறுப்பவ ரைப்போல விளங்கினார். பாடல் வருமாறு: -

" ஆட்கொள்ளும் ஐயர் தாம்இங் கமுதுசெய் திலர்கொல்’ -- - என்னாப்

பூட்டிய அரிவாள் பற்றிப் புரையற விரவும் அன்பு - நெறியின் உள்ளந் தண்டறக் கழுத்தினோடே لuنوا- tsri ஊட்டியும் அரியா கின்றார், உறுபிறப் பரிவார் ஒத்தார்.' ஆட்கொள்ளும்-அடியேனை ஆட்கொள்ளும். ஐயர்தாம்- ஐயராகிய சிவபெருமானார். தாம்: அசைநிலை. சிவபெருமா னாரை ஐயர் என்று குறிப்பிடும் இடங்களை முன்பே ஒரிடத் தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. இங்கு-இந்தத் தரைப்