பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பெரிய புராண விளக்கம்-5

விரித்தவன் வேதங்கள் வேறு வேறு தெரித்தவன் உறைவிடம் திரு வல்லமே.” பிறகு வரும் 31-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'மலையிலிருந்து குதிக்கும் அருவி தரையில் விழும்போது வழங்கிய சிவந்த நிறத்தைப் பெற்ற மாணிக்கங்களும், முல்லை நிலமாகிய காட்டில் வளர்ந்து நிற்கும் பலவகையான மரங்களில் மலர்ந்திருக்கும் அழகிய மலர்களும், பருத்திச் செடிகள் வளர்ந்து நிற்கும் இடங்களில் ஓடைகள் நீர் நிரம்பி இருக்குமாறு ஓடி வந்து இறங்கும் பாலாற்றினுடைய கரை யில் தங்கிய கங்கையாறு வாழும் சடாபாரத்தைத் தம்மு டைய தலையின் மேல் பெற்றவராகிய மணிகண்டேசுவரர் மகிழ்ச்சியை அடைந்து திருக்கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருமாற்பேறு ஆகும் ஒப்பு இல்லாத தலத்தில் உள்ள ஆலயமும் சூழ்ந்திருப்பது அந்த மலர்கள் மலர்ந்திருக் கும் வயல்களைப் பெற்ற தொண்டை வள நாட்டில் விளங் கும் மருத நிலங்கள். பாடல் வருமாறு:

'அருவி தந்தசெம் மணிகளும் புறவில் ஆய் மலரும் பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின் மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்தமாற் பேறாம் பொருவில் கோயிலும் சூழ்ந்ததப் பூம்பனை மருதம்.’’ அருவி-மலையிலிருந்து குதிக்கும் அருவி. தந்த-தரையில் விழும்போது வழங்கிய, செம்-சிவந்த நிறத்தைப் பெற்றிருக் கும். மணிகளும்-மாணிக்கங்களும். புறவில்-முல்லை நில மாகிய காட்டில் வளர்ந்து நிற்கும் பலவகையான மரங்களில் மலர்ந்திருக்கும்; இட ஆகு பெயர். அந்த மரங்களாவன: தேக்கு மரம், வேங்கை மரம், வாகை மரம், மகிழ மரம், தாழை மரம், கடம்ப மரம், மருத மரம், வில்வ மரம், வேப்ப மரம், நுணா மரம், விளா மரம் முதலியவை, ஆய்அழகிய மலரும்-மலர்களும்; ஒருமை பன்மை மயக்கம். பருவி-பருத்திச் செடிகள் வளர்ந்து நிற்கும் இடங்களில்: ஒருமை பன்மை மயக்கம் இட ஆகுபெயர். ஒடைகள்-ஓடும்