பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பெரிய புராண விளக்கம்-5

டைய பக்தியின் ஆற்றலைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு நாள் ஒரு மலரை மறைத்தருள, திருமால் சகசிர நாம அருச்சனை புரியும் சமயத்தில் ஒரு திருநாமத்துக்கு ஒரு தாமரை மலர் குறைதலைப் பார்த்து வருத்தத்தை அடைந்து தம்முடைய கண்ணையே தோண்டி மணிகண்டேசுவரருக்கு அணிந்து ஆசையை நிறைவேற்றினார். அ ப் .ே பா து மணிகண்டேசுவரர் தம்முடைய காட்சியை வழங்கியருளத் தி ரு ம .ா லு க் கு ச் சுதரிசனம் என்னும் சக்கராயுதத்தை யும் த ம் மு ைட ய கண்ணைத் தோண்டி அருச்சனை புரிந்த காரணத்தினால் பதுமாட்சன் என்னும் திருநாமத் தையும் வழங்கியருளி, இந்தத் தலத்தில் ஒரு கண நேரம் தங்கின பக்தர்களுக்கு முக்தியை வழங்கியருள வேண்டும் என்று திருமால் வேண்டிக் கொண்ட வண்ணம் திருவருளைப் புரிந்து அந்த ஈசுவரர் மறைந்தருளினார். இது சோமனும் வழிபட்ட தலம். “மன்னி மாலொடு சோமன் பணி செயும், மன்னு மாற்பேற்றடிகளை." என்று தேவாரத்தில் வருகிறது. இந்தத் தலத்தைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு: --

பொருமால் திண்படை வேண்டிநற் பூம்புனல் வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும் கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு திருமாற் பேறு தொழவினை தேயுமே.”* அடுத்து உள்ள 32-ஆம் பாடலின் கருத்து வருமாறு: தொண்டை வள நாட்டில் உள்ள மருத நிலத்தினுடைய பலரும் விழையும் மேம்பாட்டை எவ்வாறு எடுத்துக் கூறு வது பரவிய அலைகள் விசும் பல ஆறுகளினுடைய அருமை யாகிய கரைகளில் விளங்கும் சிவபெருமானுடைய திருக் கோயில்கள் பலவற்றையும் பெற்றுப் பருத்திருக்கும் துதிக் கையைப் பெற்றதும், தாருகாவனத்து முனிவர்கள் தம்மைக் கொல்லுமாறு விடுத்ததும் ஆகிய யானையின் தோலை உரித்தவராகிய பாசூர் நாதேசுவரர் மகிழ்ந்து எழுந்தருளி