பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம் 27

துடியிடை பாக மான தூயகற் சோதி போற்றி! பொடிஅணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி! " அடியனேன்-தாயனார் நடராஜப்பெருமானாரை நோக்கி ‘அடியேனுடைய. அறிவு இலாமை-அறிவு இல்லாமையை. இலாமை: இடைக்குறை. கண்டும்-பார்த்த பிறகும். என்-அடி யேனுடைய அடிமை-அடிமைத் தன்மையை. வேண்டிவிரும்பி ப்: சந்தி. படிமிசை-தரையின் மேல் உள்ள. க்:சந்தி. கமரில்-பிளப்பில்.வந்து-எழுந்தருளிவந்து. இங்கு-இந்த இடத் தில். அமுது செய்-திருவமுது செய்தருளிய. பரனே-யாவருக் கும் மேலானவனே. போற்றி-உனக்கு வணக்கம். துடியிடை: உடுக்குப்போன்ற இடுப்பைப் பெற்ற பார்வதிதேவி, அன் மொழித் தொகை. பா. க ம ன் - வ | ம பாகத் தில் இருப்பவரான, திணை மயக்கம். தூய பரிசுத்தமான. நல்-நல்ல. சோதி-சோதியே. சிவபெருமானைச் சோதியே ஒன்று குறிக்கும் இடங்களை முன்பே ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. போற்றி-உனக்கு வணக்கம். பொடி-விபூதியை. அணி-பூசிக்கொண்ட. பவள-பவளத்தைப் போன்ற, மேனி-திருமேனியையும். சிவ இபருமானுடைய திருமேனி பவளம் போல விளங்குவதைப் புலப்படுத்தும் இடங்களை முன்பே ஓரிடத்தில் காட்டி னோம்; ஆண்டுக் கண்டுணர்க. ப்: சந்தி. புரி-புரிகளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். ஈடை-சடாபாரத்தை யும் பெற்ற, ப், சந்தி, புராண-பழையவனே. சிவபெரு மானைப் புராணன் என்று குறிப்பதையும் வேறு ஓரிடத் தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. போற்றி-உனக்கு வணக்கம். . . .

பெண்களின் இடுப்புக்கு உடுக்கு உவமை: துடியிடை அகலல்குல் துரமொழியை.', 'துடிபடும் இடை யுடை மட வரல்..', 'துடியிடையாளை ஒர் பாகமாக." என்று திருஞானசம்பத்க மூர்த்தி நாயனாரும், துடியனைய இடை

மடவாள் பங்கா.', 'துடிகொண்ட இடைபடவான் பாக்ம்