பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 பெரிய புராண விளக்கம்-5

தன்ால். பரத்தியர்-வலைச்சியர்களினுடைய, பணை-மூங்கில், களைப் போன்ற ஒருமை பன்ம்ை மயக்கம், மென்-மென்மை, iான். தோள்-தோள்களும்; ஒருமை பன்மை மயக்கம். உழத். தியர்-உழவர் சாதிப் பெண்களினுடைய. மகளிர் புதல்வியர் கள். மாறாடி-தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு. மூன்-முன்ன்ால். தொகுக்கும்-கூட்டிக் குவிக்கும். நீளும் நீள Loff5 இருக்கும். நெய்தலும்-கடற்கரையைச் சார்ந்த நெய்தல் நிலமும், மருதமும்-வயல்களைச் சார்ந்த மருத நிலமும். நிலங்கள்-அங்கே உள்ள நிலங்களில், கலந்து உள-கலந்து. இருக்கின்றன. உள:இடைக்குறை. பெண்களின் தோள் களுக்கு மூங்கில்களை உவமையாகக் கூறும் இடங்களை முன்பே ஒரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க

பிறகு வரும் 47-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு அமைந்த குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நில்ம் என்னும் நான்கு நிலங்களுக்கும் பொருத்தமாக உள்ள வேலைகளில் தங்கள் தங்களுக்கு ஏற்ற: வையாக உள்ளவையும் மேவியவையுமாகிப் புரியும் தொழில் களை வேறு வேறு பலவாகிய குடும்பங்களில் விளக்கத்தை. அடைந்து கெட்ட செயல்கள் என்று கூறப்படுபவற்றைச் சொப்பனத்திலும் எண்ணுதல் இல்லாத திருவுள்ளங்களைப் பெற்ற பரிசுத்தமாகிய மக்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்தும் தொண்டை வள நாட்டினுடைய பான்மை அடியே னுடைய வார்த்தைகளின் எல்லைக்குள் அடங்குவதோ?” பாடல் வருமாறு:

ஆய நானிலத் தமைதியில் தத்தமக் கடுத்த மேய செய்தொழில் வேறு பல் குலங்களின் விளங்கித் தீய என்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்வாழ் தொண்டை நாட்டியல்பு சொல்

- வரைத்தோ?” ஆய-அவ்வாறு அமைந்த. நானிலத்து-குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம் என் னும் நான்கு