பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பெரிய புராண விளக்கம்-5,

ஆகும் ஏகம்பமாகிய காஞ்சீபுரத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டருளிய தம்முடைய பெருமானும் கணவனுமாகிய ஏகாம்பரேசுவரனை வண்டுகள் மொய்த்துக் கொண்டு திரியும் கூந்தலின் கற்றை அந்த ஏகாம்பரேசுவரருக்கு முன்னால் தரையில் படுமாறு அவரைப் பணிந்து தம்முடைய திருவுள்ளத்தில் வந்து எழுந்து விளங்கும் பேராவல் முன் னால் பொங்கி எழத் தம்முடைய திருவுள்ளத்தில் மேற் கொண்ட காதலாகிய விருப்பம் ஒர் அளவு இல்லாமல் தாம் எண்ணிய பூசையைப் புரிவதை மேற்கொண்டு கோவைப் பழங்களைப் போன்ற அதரங்களைப் பெற்ற திருவாயை உடைய உமை நங்கையாகிய காமாட்சி அம்மை பரிசுத்த மாகிய அருச்சனையை ஆரம்பித்தலை விரும்புபவள் ஆனாள். பாடல் வருமாறு: -

' கண்ட போதில் அப்பெருந்தவப் பயனாம்

கம்பம் மேவிய தம்பெரு மானை வண்டு லாம்குழற் கற்றைமுன் தாழ

வணங்கி வந்தெழும் ஆசைமுன் பொங்கக் கொண்ட காதலின் விருப்பள வின்றிக்குறித்த பூசனைக் கொள் கைமேற் கொண்டு தொண்டை யங்கனி வாயுமை நங்கை

தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.” - கண்ட-அவ்வாறு காமாட்சி அம்மை ஏகாம்பரேசுவர ரைத் தரிசித்த போதில்-சமயத்தில். அப்பெரும்-அந்தப் பெருமையைப் பெற்று விளங்கும். தவ-தவத்தினுடைய. பயன் ஆம்-பிரயோசனம் ஆகும். கம்பம்-ஏகம்பமாகிய காஞ்சீபுரத்தில். மேவிய-விரும்பித் திருக்கோயில் கொண் டருளிய. தம்-தம்முடைய. பெருமானை-பெருமானும் கணவனும் ஆகிய ஏகாம்பரேசுவரனை. வண்டு-வண்டுகள்; ஒருமை பன்மை மயக்கம். உலாம்-மொய்த்துக் கொண்டு திரியும். குழல்-கூந்தலின். கற்றை-தொகுதி. முன்-அத்த ஏகாம்பரேசுவரருக்கு முன்னால். தாழ- தரையில் படுமாறு. வணங்கி.அந்த ஈசுவரரைப் பணிந்து. வந்து எழும்-தம்மு