பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 - பெரிய புராண விளக்கம்-5

என்ன மிடைந்தன குவுவுக் கொங்கை.” (குகப் படலம், 33). "முலை துமித்துயர் முக்கினை நீக்கிய முறைமை, மலை துமித்தென.” (சூர்ப்பனகைப் படலம், 46), "கொங்கை யினைக் குவட்டை நோக்கி." (அயோமுகிப் படலம், 31), சகுங்குமம் கொட்டியன்ன குவிமுலைக்குவட்டுக் கொக்க.'" (அரசியற் படலம்,2). கேழிலா வனமுலைக்கிரி சுமந்து.'

(நாடவிட்ட படலம், 68), மேருவரை மாமுலையள்.” (பிலம் நீங்கு படலம், 73), பருவரை என முலை பலவும் நாற்றினர். (காட்சிப் படலம், 57), "வார்க்குன்றாம்.

முலை. (நிந்தனைப் படலம், 29), வணங்கு நுண்ணிடை மலை முலை.' (படைத்தலைவர் வதைப் படலம், 61) என்று கம்பரும் பாடியவற்றையும் காண்க.

பெண் ணி ன் நெற்றிச்கு வில் உவமை: "திருந்து சிவனும்: சிலை நுதலாளும்.’’ என்று திருமூலரும், வில்லேர் துதலாள்.', வில் லேர் நுதல் வேல் நெடுங்கண்ணியும். ' என்று திருமங்கையாழ்வாரும், 'விற்கலை நுதலினாரும்.' (மிதிலைக் காட்சிப் படலம், 6), சிலைக் கோட்டு நுதல்.” (குல முறை கிளத்து ட டலம் , 15). விற்பகை நுதலினார்.' (வரை க்காட்சிப் படலம், 52), 'விற்றிரு நுதல்மாதே." (வனம் புகு படலம், 12), சிலையெனப் பொலி நுதல் விளக்கே., 'விற்கொள் வாணுதல் விளங்கிழையிளந்: தளிர்க்கொழுந்தே.' (சித்திர கூடப்படலம், 13, 17), வில் லொக்கும் நுதல்.’’ (மாரீசன் வதைப்படலம், 74), 'சிலை நுதல். போனாள்.' (கிட்கிந்தைப் படலம், 77), 'விற்கூடு துதற்றிரு. (உருக்காட்டுப் படலம், 94) என்று கம்பரும் பாடியவற்றைக் காண்க.

பிறகு வரும் 65-ஆம் சவியின் உள்ளுறை வருமாறு: - *ஏகாம்பரேசுவரர் தம்முடைய காதலைப் பெற்ற மனைவியாகிய காமாட்சி அம்மை தம்மை இரண்டு கரங்களா லும் தழுவி அணைக்க அந்த ஈசுவரர் தம்முடைய திருமேனி குழைவதைப் பார்த்து அசரங்களும் சரங்களும் ஆக உள்ள