பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 34

ஆதி தேவனா ராயுமா தவம்செய்

அவ்வரம் கொலோ அகிலம் ஈன்றளித்த மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு

வளைத்த ழும்புடன் முலைச்சுவடணிந்தார்.”

பூதியாகிய-விபூதியாகிய புனித-து.ாய்மையாகிய, நீறு. திருநீற்றில். ஆடி-அபிடேகம் செய்யப் பெற்று. ப்:சந்தி. பொங்கு-பொங்கி வரும். கங்கை-கங்கையாறு. தோய்-தங் கும். முடி-தம்முடைய தலையில். ச்: சந்தி. சடை-சடா பாரத்தை. புனைந்து-அணிந்து கொண்டு. காதில்-தம்முடைய இருச் செவிகளில்; ஒருமை பன்மை மயக்கம். வெண்வெள்ளை நிறத்தைப் பெற்ற. குழை-சங்கக் குழைகளும்: ஒருமை பன்மை மயக்கம். கண்டிகை-தம்முடைய திருமார் பில் உருத்திராக்க மாலையும். தாழ-தொங்க. க்:சந்தி. கலந்த-தம்முடம் கல்ந்துள்ள யோகத்தின்-யோகத்தோடு. மருவிய-சேர்ந்த. கருத்தால்-எண்ணத்தினால், ஆதிதேவ னார்-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய ஏகாம் பரேசுவரர். ஆயும்-ஆராய்ச்சி புரிந்தருளும். மா-பெரிய. தவம்-தவத்தை. செய்-காமாட்சி அ ம் ைம செய்யும். அவ்வரம் கொல்-அந்த வரமோ. ஒ: அசை நிலை. அகிலம்அகிலாண்டங்களையும். ஈன்றளித்த-பெற்றுத் தந்த மாது. காமர் ம. ரு வி ய காமாட்சி அ ம் ைம. மெய்-தன்னுடைய உண்மையான. ப்:சந்தி. பயன்-பயனை. கொடுப்பவே-வழங் கியருளவே. கொண்டு-அதை ஏற்றுக் கொண்டு. வளை-அந்த அம்மையினுடைய திருக்கரங்களில் அணிந்திருக்கும் வளை களினுடைய ஒருமை பன்மை மயக்கம். த்:சந்தி. தழும்புடன் -தழும்போடு. முலை-அவளுடைய கொங்கைகளின்; ஒருமை பன்மை மயக்கம், ச்:சந்தி. சுவடு-தழும்புகளையும்; ஒருமை பன்மை மயக்கம். அணிந்தார்-அந்த ஈசுவரர் புனைந்து கொண்டருளினார். . -- ... .

பெ-22