பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 பெரிய புராண விளக்கம்-இ.

என்றனள்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தாள்.

பிறகு வரும் 70-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: இடப வாகனத்தின் மேல் எழுந்தருளுபவராகிய ஏகாம் பரேசுவரர் அந்த இ மா ச ல அரசனுடைய புதல்வியாகிய காமாட்சி அம்மை தம்மை வேண்டிக் கொள்ள அந்த அம்மை தான் விழைந்த பூசையைப் புரிந்து கொண்டு அந்தக் காஞ்சி புரத்தில் அமர்ந்து கொண்டே இடைவிடாத முப்பத்திரண்டு தருமங்களையும் வளர்ப்பதற்கு ஏற்றவையாக விளங்கும் விதைகளாக இந்த உலகத்திலும் பரலோகத்திலும் புரியுமாறு: இரண்டு படிகள் நெற்களை அந்தக் காமாட்சியம்மைக்கு வழங்கியருளி இழிந்த குலங்களில் பிறந்தவர்களாகியும் உயர்ந்த குலங்களில் பிறந்தவர்களாகியும் காஞ்சீபுரத்தில் வாழும் மக்கள் தாங்கள் புரியும் தீய வினைகளாகிய பாவங் களும் தடை உண்டாகாமல் உண்மையான சிவகதியாகிய வழியைப் பெறுவதற்கு வேண்டியவையாகும் தவங்களாக இருக்கவும் ஏகாம்பரேசுவரர் மகிழ்ச்சியை அடைந்து தன்னு: டைய திருவருளை வழங்கினார். பாடல் வருமாறு:

' விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு பூசனை மேவிவிற் றிருந்தே இடையறா அறம்வ ளர்க்கும்வித் தாக

இகப ரத்திரு நாழிகெல் அளித்துக் கடைய ராகியும் உயர்ந்தவ ராயும்

காஞ்சி வாழ்பவர் தாம்செய்தி வினையும் தடைய டாதுமெய்ங் நெறியடை வதற்காம்

தவங்க ளாகவும் உவந்தருள் செய்தார்.’’ விடையின்-இடப வாகனத்தின். மேலவர்-மேல் எழுந்தரு ளுபவராகிய ஏகாம்பரேசுவரர். மலை-அந்த இமாசல அரச னுடைய; திணை மயக்கம். மகள்-புதல்வியாகிய காமாட்சி யம்மை. வேண்ட-தம்மை வேண்டிக் கொள்ள. விரும்பு-அந்த அம்மை தான் விழைந்த, பூசனை-பூசையை. மேவி-புரிந்து கொண்டு. வீற்றிருந்தே-அந்தக் காஞ்சீபுரத்தில் அமர்ந்து