பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 பெரிய புராண விளக்கம்-5

அலகு-கணக்கு. இல்-இல்லாத கடைக்குறை. நீள்நெடுங்காலமாக. தவத்து-தவத்தைப் புரிந்த, அறப்பெரும் செல்வி.தருமங்களைப் பாதுகாக்கும் பெருமையைப் பெற்ற செல்வியாகிய காமாட்சி அம்மை. அற: ஒருமை பன்மை: மயக்கம். அண்டமாம்-இ ந் த ப் பூ ம ண் ட ல ம் ஆகும். திருமனைக்கு-திருமாளிகைக்கு.இடும்-ஏற்றி வைக்கும். தீபம். திருவிளக்கு. உலகில்-இந்தப் பூமண்டலத்தில். வந்து உறுபிறந்து வந்து சேரும். பயன்-பிரயோசனத்தை. அறிவிக்கதெரிவிக்கும் பொருட்டு, ஒங்கும்-ஒங்கி மலரும். நாள்-அன்று மலர்ந்த, மலர்-மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மூன்று டன் ஒன்று-மூன்றோடு ஒன்றாகிய நான்கும். நிலவ-அமையு. மாறு. ஆண்டி னுக்கு-ஒரு வருடத்துக்கு, ஒருமுறை-ஒரு தடவை. செய்யும். புரியும். நீடு-நெடுங்காலமாக உள்ள. தொன்மையால்-பழமையால். நிறைந்த-மக்கள் நிரம்பி யுள்ள. பேருலகம்-இந்தப் பெரிய பூமண்டலம் மலர்மலர்ந்த, பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். திருஅழகிய க்:சந்தி. காமக்கோட்டத்து-காமக்கோட்டமாகிய காமாட்சியம்மையின் திருக்கோயில் விளங்கும்.காஞ்சீபுரத்தில். வைத்த-அமைத்து வைத்த, நல்-நல்ல. அறம்-முப்பத்திரண்டு தருமங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அ ைவ இ ன் ன என்பதை வேறோ ரி ட த் தி ல் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. மன்னவே-நிலை பெற்று விளங்குமாறே. மன் னும்.அந்தக் காஞ்சீபுரம் நிலைபெற்றுத் திகழும்.

அடுத்து வரும் 73-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

"தீங்குகளாகிய பாவங்களைப் போக்கும் பல புண் ணிய தீர்த்தங்களைப் பாதுகாக்கும் சிறப்பான செய்கையினால் அழகிய காமக்கோட்டமாகிய காமாட்சி அம்மையினுடைய திருக்கோயிலுக்குப் பக்கத்தில் அந்தர் உலகத்தில் வாழும் தேவர்களும், மத்திய லோகமாகிய இப் பூமண்டலத்தில் வாழும் அனைத்து மக்களும், பாதல லோகத்தில் வாழும்