பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 359

நிலை பெற்று விளங்குகின்ற அந்த அழகிய நகரமாகிய காஞ்சீபுரத்தினுடைய எல்லைக்குள் இந்த மண்ணுலகத்தில் மிகுதியாக உள்ள ஒரு நன்மையினால் அங்கே வரும் யானையைப் புதரில் வாழும் முயல் முன்னால் துரத்த அவ்: வாறு அடைந்த தொலைதல் இல்லாத ஊக்கத்தினால் தான் வாழும் நிலத்திலிருந்து போக்குதலைப் புரியும் தானம் அல் லாமலும் வில்லும் எழுத்தாணியும் எந்த வகையான நிலங்க ளிலும் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும் இறவாத் தாம் என்ற இந்தச் சிவத்தலங்கள் இயல்போடு அந்தக் காஞ்சீ புரம் பெற்று விளங்குவது. பாடல் வருமாறு:

  • மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்

மண்ணில் மிக்கதோர் நன்மையி னாலே துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன்

துரக்க எய்திய தொலைவில்ஊக் கத்தால் தன்னி லத்துகின் றகற்றுதல் செய்யும்

தானம் அன்றியும் தனு எழுத் தாணி எங்கி லத்தினும் காண்பரும் இறவாத் ** தானம் என்றிவை இயல்பினில் உடைத்தால்.”

மன்னுகின்ற-நிலை பெ ற் று விளங்குகின்ற, அத்திரு. -அந்த அழகிய நகர்-நகரமாகிய காஞ்சீபுரத்தினுடைய. நகர்-பெரிய சிவத் தலம். வரைப்பில்-எல்லைக்குள், மண்ணில் -இந்த மண்ணுலகத்தில். மிக்கது-மிகுதியாக உள்ள ஓர்-ஒரு. நன்மையினால்-நலத்தினால். ஏ: அசை நிலை. துன்னும்அங்கே வரும். யானையை-ஒர் யானையை. த்:சந்தி. துாற்றில்-புதரில். வாழ்-வாழும். முயல்-ஒரு முயல். முன்தனக்கு முன்னால். துரக்க-துரத்த. எய்திய-அவ்வாறு செய்த தனால் அடைந்த, தொலைவு - தொ ைல த ல் . இல்-இல்லாத கடைக்குறை. ஊக்கத்தால்-ஊக்கத்தினால்; உற்சாகத்தால். தன்-தன்னுடைய. நிலத்து நின்று-நிலத்தி லிருந்து அகற்றுதல்-போக்குதலை. செய்யும்-புரியும். தானம் அன்றியும்-தானம் அல்லாமலும். தனு-வில்லும். எழுத்தாணி