பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 பெரிய புராண விளக்கம்-5

மகளோடு காஞ்சீபுரத்துக்கு எழுந்தருளி இந்தத் தீர்த்தத்தில் நீராடி, பலவுயிர்களையும் காக்கும் தொழிலோடு வைகுந்தத் தில் வாழும் பதவியையும் பெற்றான். கலியுகத்தில் காமாட்சி யம்மை இந்தத் தீர்த்தத்தில் முழுகியருளி ஏ. காம்பரேசுவர ருடைய திருமேனியில் பாதிப் பகுதியைப் பெற்றாள். இந்தத் தீர்த்தத்தில் சூரியன் முழுகித் தக்கன் யாகத்தில் இழந்த தன் னுடைய பற்களை அடைந்தான். வடதிசைக்குத் தலைவனா கிய குபேரன் காமாட்சியம்மையினுடைய திருமேனியின் அழகைப் பார்த்ததால் ஒரு கண்ணை இழந்தான். அவன் இந்தத் தீர்த்தத்தில் நீராடி மீண்டும் இழந்த கண்ணைப்பெற் றான்; சிவபெருமானுக்கு நண்பன் என்ற பதவியையும் பெற் றான்.துச்சருமேனன் என்னும் ஒரு முனிவன் இந்தத் தீர்த்தத் தில் நீராடி ஊர்வசியினுடைய கொங்கைகளை அணையும் இன்பத்தை அடைந்தான். கண்ணனுடைய தேவிமாருள் ஒருத்தியாகிய சாம்பவதியினுடைய புதல்வனாகிய சாம்பன் என்பவன் தனக்கு உண்டாகியிருந்த குட்ட நோயிலிருந்து இந்தத் தீர்த்தத்தில் நீராடியதனால் நீங்கப் பெற்றான். நளச் சக்கரவர்த்தியும், இராமபிரானும், பஞ்ச பாண்டவர் களும் ஆகியவர்கள் இந்தத் தீர்த்தத்தில் முழுகித் தாங்கள் இழந்த தங்களுடைய நாடுகளையும் அரசுரிமைகளையும் அடைந்தார்கள். இந்தச் செய்திகளைக் காஞ்சிப் புராணத் தில் உள்ள இட்டசித்தீச்சரப் படலத்திற் காணலாம்.

அடுத்து உள்ள 79-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'ஒரு தாளில் மூன்று மலர்கள் மலரும் பொற்றாமரைத் தடாகமும், நீளமாக நிறைந்த நீர் மேற்குத் திக்கில் ஒடிச் சென்று.தன்னிடம் உள்ள புனலை மறைக்கும் பெரிய ஆற் றோடு நெடுங்காலமாக மலர்ந்து செங்குவளை மலரையும், பசுமையான தாமரை மலரையும் உச்சி வேளையில் மலரும் மலர்களைப் பெற்ற பாதிரி மரத்தை அல்லாமல் கருமை பான மேகத்தை ஒத்து விளங்குபவனாகிய திருமால் எழுந் தருளித் தங்கும் அத்திகிரியின் எல்லையில் உறங்காததும்