பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பெரிய புராண விளக்கம்-5

'நிழலை முன்னால் கட்டும் கிணறு ஒன்றும், பற்றுக் கோடாக குடித்தால் விடமாகும் தடாகம் ஒன்றும், மாயம் இல்லாமல் வந்து தனக்குள் படிந்து மூழ்கிய மக்கள் குரங்கு களின் வடிவங்கள் ஆக மாறும் பிலம் ஒன்றும், உண்டாகிய அந்தக் குரங்குகளின் உருவங்கள் போகுமாறு முழுகும் திக ழும் பொய்கை ஒன்றும், சேர்ந்து வரும் தேவலோகத்தில் வாழும் தேவர்களோடு உண்டாகிய ஆனந்தத்தை உண் டாக்கும் பிலம் ஒன்றனோடு அத்தகைய அதிசயங்கள் பல அந்தக் காஞ்சீபுரத்தில் இருக்கின்றன. பாடல் வருமாறு:

சாயை முன்பிணிக் கும்கின றொன்று

தஞ்சம் உண்ணின் நஞ்சாம் தடம் ஒன்று மாயை இன்றிவங் துள்ளடைக் தார்கள் வான ரத்துரு வாம்பிலம் ஒன்றும்; மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்

விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ டாய இன்பம் உய்க்கும் பிலம்ஒன்றோ

டனைய ஆகிய அதிசயம் பலவால்." சாயை-நிழலை. முன்-முன்னால். பிணிக்கும்-கட்டும். கிணறு-கேணி. ஒன்று-ஒன்றும். தஞ்சம்-தாகம் தீர்ப்பதற்குப் பற்றுக் கோடாக. உண்ணின்-நீரைக் குடித்தால், நஞ்சு ஆம். விடமாக மாறும். தடம்-தடாகம். ஒன்று-ஒன்றும். மாயைமாயம்.இன்றி-இல்லாமல்,வந்து உள்-வந்து தனக்குள். அடைந்: தார்கள்-படிந்து முழுகிய மக்கள். வானரத்து-குரங்குகளின்: ஒருமை பன்மை மயக்கம். உரு ஆம்-வடிவங்களாக மாறும். உரு: ஒருமை பன்மை மயக்கம், பிலம் ஒன்றும் ஒரு பிலமும். மேய-அவ்வாறு உண்டாகிய, அவ்வுரு-அந்தக் குரங்குகளின் வடிவங்கள்: ஒருமை பன்மை மயக்கம். நீங்கிட-அகலுமாறு. க்:சந்தி. குளிக்கும்-முழுகும். விளங்கு-திகழும். பொய்கையும். -மனிதர் ஆக்காத நீர்நிலையும். ஒன்று-ஒன்று ஆகும். விண் ணவரோடு-தேவலோகத்தில் வாழும் தேவர்களோடு; ஒருமை, பன்மை மயக்கம்:ஆய-உண்டாக்இய. இன்பம்-ஆனந்தத்தை