பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பெரிய புராண விளக்கம்-5

அந்த மில்அறம் புரப்பவள் கோயில்

ஆன போகபீ டமும் உளதாகும்: எந்தை பார்மகிழ் காஞ்சிரீ டெல்லை

எல்லை இல்லன உள்ள ஆ ரறிவார்.'

வந்து-அவ்வாறு காஞ்சீபுரத்திற்கு வந்து. அடைந்தவர்சேர்ந்தவர்களாகிய சித்தர்கள் முதலியா கள்; ஒருமை பன்மை மயக்கம். தம்-தங்களுடைய. உரு-வடிவங்கள்; ஒருமை. பன்மை மயக்கம். மாய-மறைய. மற்று-அவ்வாறு மறையாமல் வேறாக. உளாரை-உள்ளவர்களை; ஒருமை பன் மை மயக். கம்; இடைக்குறை. த்:சந்தி. தாம்-தாங்கள். காண்பிடம்பார்க்கும் இடம் ஒன்று. உளது-அந்தக் காஞ்சீபுரத்தில் இருக்கிறது; இடைக்குறை. சிந்தை-தங்களுடைய திருவுள்ளங் களை ஒருமை பன்மை மயக்கம், யோகத்து-யோகத்தில் செலுத்தும். முனிவர்-முனிவர்களும்; ஒருமை ப ன் ைம மயக்கம். யோகினிகள் - .ே யா கி னி க ளு ம் ; இவர்கள் கொற்றவையோடு இருக்கும் பரிவார தேவதைகள் சேரும்-- வந்து சேர்ந்திருக்கும். யோக பீடமும் யோக பீடம் ஒன்றும். என்றும்.எந்தக் காலத்திலும் உளது-அந்தக் காஞ்சி மாந. கரில் இருக்கிறது; இடைக்குறை. அந்தம்-முடிவு. இல்இல்லாத கடைக்குறை. அறம்-முப்பத்திரண்டு தருமங்களை யும்; ஒருமை பன்மை மயக்கம். புரப்பவள். பாதுகாப்பவளா கிய காமாட்சி அம்மை எழுந்தருளியிருக்கும். கோயில்ஆலயம். ஆன. ஆக அமைந்த. போக பீடமும்-போக பீடம் ஒன்றும். உளது ஆகும்-அந்த நகரத்தில் இருப்பது ஆகும். உளது:இடைக்குறை. எந்தையார்-அடியேங்களுடைய தந்: தையாரைப் போன்றவராகிய ஏகாம்பரேசுவரர். இது சேக். கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறி tu ģil. மகிழ்-மகிழ்ச்சியை அடைந்து கோயில் கொண்டு எழுந். தருளியிருக்கும். காஞ்சி-காஞ்சீபுரத்தில், நீடு நீளமாக உள்ள_ எல்லை.எல்லையினுடைய. எல்லை-வரம்பை, இல்லன-இல்