பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4{}{} பெரிய புராண விளக்கம்-3

மயக்கம். வந்து ஏறுமுன்-வந்து ஏறுவதற்கு முன்னால், நறுநறுமணம் கமழும். நீர்-நீரோடு சேர்த்து. வண்ட ஆடல் வண்டல் என்னும் விளையாட்டை அந்தப் பெண்மணிகள் ஆட. த்:சந்தி. துர-தூய்மையாகிய. மணி-மாணிக்கத்தையும். ப்:சந்தி. பொன்-தங்கத்தையும். புனை-அணிந்த நாளவாயைப் பெற்ற, த்:சந்தி. துருத்தி-நீர் வீசு கருவி. வீசும்நீரை வீசி அடிக்கும். சுடர்-ஒளியை. விடு-வீசும். செம்சிவந்திருக்கும். குங்கும-குங்குமப் பூ களைக் கரைத்திருக் கும்; ஒருமை பன்மை மயக்கம். நீர்-புனலின். த்:சந்தி. துவலை-துளிகள்: ஒருமை பன்மை மயக்கம். தோய்ந்தபடிந்த. காமர்-விருப்பத்தை உண்டாக்கும்; அழகு மருவிய’ எனலும் ஆம். மணி.அழகிய, நாசிகையின்-மூக்கணை என் னும் உறுப்பின். மருங்கு-பக்கத்தில், த ங் கு ம் - தங்கித் த. வ ழு ம் . கருமுகில்கள்-கருமையான மேகங்கள். செம் முகில்கள் ஆகி-அந்தக் குங்குமப் பூக்களைக் கரைத்திருக்கும் நீரை வீசியதால் சிவந்த நிறத்தைப் பெற்றிருக்கும் மேகங்கள் ஆகி. க்:சந்தி. காட்டும்-ஒரு தோற்றத்தைக் காண்பிக்கும்.

பிறகு வரும் 96-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பனி மிகுதியாகக் கொண்ட உயர்ந்த இமய மலையை யும் வேறு மலைகளையும் போல விளங்கும் சுண்ணாம்பை அடித்த பளிங்குக் கற்களாற் கட்டியுள்ள திருமாளிகைகளினு: டைய உயரமான சிகரங்களினுடைய உயரமான உச்சிகளுக்கு. ஏறும் படிகளினுடைய வரிசையும் ஆகாயமும் அறிவதற்கு அருமையாக உள்ள பரிசுத்தத்தால் அந்தப் படிகளில் சேர்ந்து கொண்டு தங்களுடைய பந்துக்களோடு இறங்கியும் ஏறியும் செல்லுகின்ற வலிமையைப் பெற்ற ஆடவர்களையும், பெண் மணிகளையும் தேவலோக்த்திலிருந்து இறங்கி வரும் தேவர் களையும் தெய்வலோகத்துப் பெண்மணிகளையும் வேறு வேறாகத் தெரிந்து கொள்வதற்கு அருமையாக இருக்கும் பான்மையைப் பெற்றவையாகிய திருமாளிகைகள் அந்தக் காஞ்சிமாநகரத்தில் பல உண்டு. பாடல் வருமாறு: