பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 பெரிய புராண விளக்கம்-5

பெண்மணிகளினுடைய இடுப்புக்களே தளர்ச்சியை உடைய, வையாக விளங்கும்; அந்தக் காஞ்சி மாநகரத்தில் உள்ள வீதிகளில் உயர்ந்து நிற்பவை யாகிய மாடங்களில் கட்டி யிருக்கும் துவசங்களே அசைந்து ஆடிக் கொண்டிருக்கும்.ே சிவந்த நிறத்தைப் பெற்ற முகபடாங்களை அணிந்திருக்கும். ஆண் யானைகளே திகைப்பை அடைபவை; பரவி வளர்ந் திருக்கும் மரங்கள் ஓங்கி வளரும் பூம்பொழில்களில் உள்ள பலவகை மரங்களே பழங்களை உடையவை. பாடல் வருக

மாறு:

- சாய லார்கள் நுசுப்பே தளர்வன,

ஆய மாடக் கொடியே அசைவன: சேய ஓடைக் களிறே திகைப்பன: பாய சோலைத் தருவே பயத்தன. * சாயலார்கள்-மயில்களைப் போன்ற சாயல்களைப் பெற்றவர்களாகிய பெண்மணிகளினுடைய, சாயல்: ஒருமை பன்மை மயக்கம். நுசுப்பே-இடுப்புக்களே, ஒருமை பன்மை . மயக்கம். தளர்வன-மெலிவை உடையவையாக விளங்கும். காஞ்சீபுரத்தில் வாழும் தொண்டர்கள் தளர்ச்சியை அடை யாமல் தங்களுக்கு உரிய வேலைகளைச் செய்து நிறை. வேற்றுவார்கள் என்பது குறிப்பு. ஆய-அந்தக் காஞ்சி மாநகரத்தில் இருப்பவை ஆகிய. மாடவீதிகளில் உயர்ந்து நிற்பவையாகிய மாடங்களில்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கொடியே-கட்டியிருக்கும் துவசங்களே; ஒருமை. பன்மை மயக்கம். அசைவன-அசைந்து ஆடிக் கொண்டிருக் கும். அந்தக் காஞ்சீபுரத்தில் வாழும் திருத் தொண்டர்கள் தளர்ச்சி சிறிதும் இல்லாமல் இருப்பார்கள் என்பது குறிப்பு. சேய-சிவந்த ஒடை-பொன்னால் செய்த முகபடாங்களை அணிந்து கொண்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. களிறே-ஆண் யானைகளே; ஒருமை பன்மை மயக்கம். திகைப்பன-எந்தச் சாலையில் போவது என்று அறியாமல் திகைத்து நிற்பவையாக விளங்கும். காஞ்சி மாநகரத்தில்