பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாய நாயனார் புராணம் 3از

மேல் மழ நாடு ஆகும். அந்த இடத்தில் உள்ள அந்த நாடு மண்ணுலகத்தில் விளங்கும் அருமையான அணிகல மாகத் திகழ அந்த மேல்மழநாட்டுக்கே ஒப்பற்ற மங்கல Léf了虏 அமைந்தது திருமங்கலம் ஆகிய மக்கள் இனிது வாழும் பழைய ஊர். பாடல் வருமாறு:

பொங்களில் வண்டு புறம்பலை சோலைகள் மேல்ஓடும் வெங்கதிர் தங்க விளங்கிய மேல்மழ கன்னாடாம் அங்கது மண்ணின் அரும்கல மாக அதற்கேஓர் மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ்மூதூர்.’’ பொங்கரில்-மரக்கிளைகளில்; ஒருமை பன்மை மயக்கம். வண்டு-வண்டுகள்: ஒருமை பன்மை மயக்கம். புறம்பு -மலர்களில் உள்ள தேனை நாடி வெளியில். அலைஅலைந்து திரியும், சோலைகளின் மேல்-பூம்பொழில்களின் மேல். ஒடும்-வானத்தில் செல்லும், வெம்-வெப்பமான, கதிர்-கிரணங்களை வீசும் சூரியன்; ஒருமை பன்மை மயக்கம். தங்க-தங்குமாறு. விளங்கிய-விளக்கத்தைப் பெற். றுள்ள. மேல்மழ நல்நாடுஆம் நல்லமேல்மழ நாடு ஆகும், அங்கு-அந்தச் சோழ நாட்டில் உள்ள. அது-அந்த நாடு. மண்ணின்-இந்த மண்ணுலகத்தில் விளங்கும். அரும்கலமாக -அருமையான அணிகலமாகத் திகழ. அதற்கே-அந்த மேல் மழ நாட்டுக்கே. ஓர்-ஒப்பற்ற, மங்கலம் ஆனது-மங்கல மாக அமைந்தது. மங்கலம்ஆகிய-திருமங்கலம் ஆகிய வாழ்-மக்கள் இனிது வாழும். மூதூர்-பழைய ஊர். -- அடுத்து உள்ள 8-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

நிகா இல்லாத பெருமையைப் பெற்றிருக்கும் குடும் பங்கள் நெடுங் காலமாக வாழ்ந்த பான்மையோடு குறை யாமல் தப்புதல் இல்லாத நீர்வளம், நிலவளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெருகும் வண்ணம் செய்து முப்பத்திரண்டு வகையான தருமங் களைச் செய்யும் சான்றாண்மையோடும் சொல்லுவதற்கு உயர்ச்சியை அடைந்த சிறப்புக்களால் நிறைந்து விளங்குவது