பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442. பெரிய புராண விளக்கம்-5

செறிந்து ஆகாயத்திலிருந்து பொழியும் மழை நீர்த்தாரைகள் பார்ப்பவர்களுடைய கண்கள் நுழையாத விதத்தில் செறிந்து இருக்க தளர்ச்சியைப் பெற்றதிருவுள்ளத்தை உடைய பக்தரா கிய திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தம்முடைய அறிவை மறந்து போய் செய்வதற்கு அருமையாக உள்ள தவத்தைப் 4'ந்த அந்தத் தவசியாரிடம் அவருடைய சம்மதத்தைப் பெறுவதற்கு எண்ணி வருத்தத்தை அடைந்து, 'இனிமேல் அடியேன் என்ன செயலைப் புரிவேன்' என்று எண்ணி நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு:

" திசைமயங்க வெளி அடைத்த

செறிமுகிலின் குழாம்மிடைந்து மிசைசொரியும் புனல்தாரை

விழிநுழையா வகைமிடைய அசைவுடைய மனத்தன்பர்

அறிவுமறந் தருந்தவர்.பால் இசைவுநினைந் தழிந்தினியான்

என்செய்கேன்" எனகின்றார்.' திசை-கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு,வடகிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்னும் எட்டுத்திசை களும்; ஒருமை பன்மை மயக்கம். மயங்க-மயங்கும் வண்ணம். வெளி-வான வெளியை, அடைத்த-மூடிக் கொண்டிருந்த, செறி-நெருக்கமாக இருந்த முகிலின்-மேகங்களினுடைய: ஒருமை பன்மை மயக்கம், குழாம். கூட்டம். மிடைந்துசெறிந்து மிசை ஆகாயத்திலிருந்து சொரியும்.பொழியும். புனல்-மழை நீரினுடைய தாரை-தாரைகள்: ஒருமை. பன்மை மயக்கம். தாரை-நீர் ஒழுக்கு. விழிபார்ப்பு வர்களுடைய கண்கள்: ஒருமை பன்மை மயக்கம். நுழையாநுழைய முடியாத வகை-விதத்தில். மிடைய-செறிந்திருக்க அசைவு உடைய-தளர்ச்சியைப் பெற்ற.டினத்து-திருவுள்ளத் தைக் கொண்ட, அன்புர்-பக்தராகிய திருக்குறிப்புத் கொண்ட நாயனார். அறிவு-தம்முடைய அறிவை மறந்து: