பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாய நாயனார் புராணம்

41. உள்ள ஒளியை விசும் விபூதியை விரும்பிப் பூசிக் கொள்ளும் திருத்தொண்டினைப் பெற்றவர்; தம்முடைய திருவாக் லுெம் திருமேனியிலும் புகழ்வதற்குரிய திருவுள்ளத்திலும், தாம் புரிந்து வரும் தொழிலினிடத்திலும், பேய்களோடு சேர்ந்து திருநடனம் புரிந்தருளும் தலைவனாகிய நடராஜப் பெருமானுடைய திருவடிகளை அல்லாமல் வேறு எதையும் விரும்பாதவர் அந்த நாயனார்." பாடல் வருமாறு: - -

ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யம்செய்தார்; தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்: வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப்பாலிற் பேயுடன் ஆடு பிரானடி அல்லது பேணாதார்.' ஆயர்-அந்த ஆனாய நாயனார் இடையர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். குலத்தை-சாதியை. விளக்கிடவிளக்கத்தை அடையும் வண்ணம். வந்து-திருமங்கலத்துக்கு வந்து. உதயம் செய்தார்-திருவவதாரம் செய்தருளினார். தாய-பரிசுத்தமாக உள்ள. சுடர்-ஒளியை வீசும். த்:சந்தி. திருநீறு-விபூதியை, விரும்பு-விரும்பிப் பூசிக் கொள்ளும். தொழும்பு-திருத்தொண்டினை. உள்ளார் - பெ ற்றிருக்கிற வர். வாயினின்-தம்முடைய திருவாக்கிலும். மெய்யின்திருமேனியிலும். வழுத்து-புகழ்வதற்குரிய, மனத்தின்-திரு. வுள்ளத்திலும் வினைப்பாவில்-தாம் புரிந்தருளும் தொழி வினிடத்திலும். பேயுடன்-பேய்களோடு; ஒருமை பன்மை மயக்கம். ஆடு-திரு நடனம் புரிந்தருளும். பிரான்-தலைவ. னாகிய நடராஜப் பெருமானுடைய அடி - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். அல்லது-அல்லாமல். பேணாதார். வேறு எதையும் விரும்பாதவர் அந்த நாயனார். . விததி தாயது: "தாவன நீறகலம் பொலிய.', சுத்தம தாவது நீறு." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா மும், 'தூய வெண்ணிறு துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே." என்று மாணிக்கவாசகரும், ! பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்.',பூதியாகிய புனிதநீறாடி.', 'து.