பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 - . . . . . . பெரிய புராண விளக்கம்- :

கின்னிலைமை அறிவித்தோம்;

யுேம்இனி டிேயரும் மன்னுலகு பிரியாது

வைகுவாய்' எனஅருளி அந்நிலையே எழுந்தருளி

அணிரகாம்பரம்அணைந்தார்.' முன்-தமக்கு முன்னால் நின்று கொண்டிருந்த, அவரை -அந்தத் திருக்குறிப்புத் தொண்ட நாயனாரை. நேர்-நேரில். நோக்கி-பார்த்தருளி. முக்கண்ணர்- இயல்பாகத் தம்முடைய தருமுகத்தில் இரண்டு கண்களையும் தம்முடைய திரு. நெற்றியில் ஒற்றைக் கண்ணையும் பெற்றவராகிய ஏகாம் பரேசுவரர். மூவுலகும்-அந்தர் மத்திய பாதலம் என்னும் மூன்று உலகங்களிலும் வாழ்பவர்களுக்கு இடஆகு பெயர். உலகு: ஒருமை பன்மை மயக்கம். அந்தர்லோகம்-தேவ. லோகம்; அதில் வாழ்பவர்கள் தேவர்கள். மத்திய லோகம். இந்த மண்ணுலகம் இதில் வாழ்கிறவர்கள் ஆடவர்களும் பெண்களும். பாதலம் பாதாள லோகம்; இதில் வாழ்பவர்கள் நாகராஜக்கள். நின்-உன்னுடைய. நிலைமை-நிலைமையை. அறிவித்தோம்-யாம் தெரியப் படுத்தினோம். நீயும்: இனி.நீயும் இனிமேல், நீடிய-தெடுங்காலமாக. நம்நம்முடைய. மன்-நிலை புெற்று விளங்கும். உலகு. -சிவலோகத்தை, பிரியாது.என்றும் பிரியாமல். வைகு. வாய்-தங்கியிருப்பாயாக, என- என்று; இடைக்குறை. அருளி-அந்த ஈசுவரர் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. அந்நிலையே-அந்த நிலையிலேயே. எழுந்தருளி-அங்கிருந்து எழுந்தருளி. அணி-அழகிய, ஏகாம்பரம்-ஏகாம்பரமாகிய, காஞ்சி மாநகரத்தில் விளங்கும் தம்முடைய ஆலயத்தை; இட ஆகு பெயர். அணைந்தார்.அடைந்தருளினார்.

அடுத்து வரும் 128-ஆம் பாடல் இந்தத் திருக்குறிப்புத். தொண்ட நாயனார் புராணத்தில் உள்ள இறுதிப் பாடல். அதன் கருத்து வருமாறு: 4་ :༥. ཏཱ་