பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 பெரிய புராண விளக்கம்-5

'சேய் அடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்

தோயடைந்த வண்வயல் சூழ்தோணி புரத்தவைவன் சாயடைந்த ஞானம்மல்கு சம்பந்தன் இன்னுரைகள் வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.’’ பிறகு வரும் 2-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தச் சேய்ஞலூரில் வாழும் வேதியர்கள் சிறப்பைப் பெற்ற வெண்மையாகிய விபூதியைத் தங்களுடைய திருமேனி களில் பூசிக் கொள்ளும் ஒருமைப்பாட்டை உடையவர்கள்; உபநயனம் செய்வதற்குமுன் ஒரு பிறப்பையும் அதற்குப்பின் மற்றொரு பிறப்பையும் பெற்ற சிறப்பைக் கொண்ட துவிஜர்கள்; காருகபத்தியம், ஆகவனியம், தாட்சிணாக்கினி என்னும் மூன்று பான்மையைப் பெற்ற நெருப்புக்களைப் பாது காத்து வரும் வழியில் விளங்குபவர்கள்; இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களை முறையாக அத்தியயனம் செய்து நிறை வேற்றி மெய், வாய், கண்கள், காதுகள், மூக்கு என்னும் ஐந்து இந்திரியங்களும் தங்களைப் பின்பற்றி உணரும் தகுதியைப் பெற்றவர்கள், ஈதல், ஏற்றல், வேட்டல், வேட்பித்தல், ஒதல், ஒதுவித்தல் என்னும் ஆறு தொழில்களைப் புரியும் உண்மை யான நல்லொழுக்கத்தை ஏழு உலகங்களில் வாழ்பவர்களும் வாழ்த்தி வணங்கும் வேதியர்களாகிய அவர்சள் வாழப் பெற்று விளக்கத்தைப் பெற்றிருப்பது அந்தச் சேய்ஞலூர் ஆகும். பாடல் வருமாறு:

செம்மை வெண்ணிற் றொருமையினார்;

இரண்டு பிறப்பின் சிறப்பினார்; மும்மைத் தழல்ஓம் பியநெறியார்:

நான்குவேதம் முறைப் பயின்றார்: தம்மை ஐந்து புலனும்பின் -

செல்லும் தகையார்; அறுதொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் ஏழுலகும்

போற்றும் மறையோர் விளங்குவது.'