பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-462 பெரிய புராண விளக்கம்-5

ஆம்பான் மையினில் விளங்குவன

அணிள்ே மறுகு பலவும் உள.' தீம்-இனிமையாக இருக்கும். பால்-பால் தங்களுடைய மடிகளிலிருந்து. ஒழுக-ஒழுகும் வண்ணம். ப்:சந்தி. பொழுது தொறும்-ஒவ்வொரு வேளையிலும். ஒமதேனு-ஹோமங் களுக்குப் பால் முதலியவற்றை அளிக்கும் பசுமாடுகள். ஒம: ஒருமை பன்மை மயக்கம். தேனு: ஒருமை பன்மை மயக்கம், ச்:சந்தி. செல்வனவும்-போகின்றவையாகிய வீதிகளும், தாம். தாங்கள். பாடிய-கானம் செய்த சாமம்-சாமவேத மந்திரங் களை; ஆகுபெயர். கணிப்போர்-எண்ணிக் கணக்குப் பார்க் கும் அந்தணர்கள்: ஒருமை பன்மை மயக்கம், சமிதை -அரசங்குச்சி முதலிய சமிதைகளை ஒருமை பன்மை மயக்கம். இட-கட்டி வைக்க, க்:சந்தி. கொண்டு-அவற்றைப் பசு மாடு கள் சுமந்து கொண்டு. அனைவனவும்-அத்தணர்களின் இல்லங்களை அடைபவையாகிய வீதிகளும். பூம்-மலர்களை யும்; ஒருமை பன்மை மயக்கம். பாசடைப்சுமையாகிய இலைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். நீர்-உடைய செந்தாமரைக் கொடிகளும், வெண்டாமரைக் கொடிகளும், அல்லிக் கொடிகளும், ஆம்பற் கொடிகளும், வேறு கொடிகளும் படர்ந்திருக்கும் புனல். த்:சந்தி. தடம்-தடாகங்களில்: ஒருமை பன்மை மயக்கம். மூழ்கி.முழுகி விட்டு. மறையோர்வேதியர்களும்; ஒருமை பன்மை மயக்கம். மகளிர்-அந்தணப் பெண்மணிகளும்; ஒருமை பன்மை மயக்கம். புகுவனவும்தங்கள் தங்கள் திருமாளிகைக்குள் நுழையும் வீதிகளும். ஆம்இவ்வாறு அமையும். பான்மையினில்-தன்மையோடு: உருபு மயக்கம். விளங்குவன-திகழ்பவையாகிய அணி-அழகிய. நீள்-நீளமான மறுகு-வீதிகள்; ஒருமை பன்மை மயக்கம். பலவும் உள-பலவும் அந்தச் சேய்ஞலூரில் இருக்கின்றன. உள: இடைக்குறை.

பிறகு உள்ள 6-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தணர்களும், அவர்களுடைய பத்தினிமார்களும்