பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 பெரிய புராண விளக்கம்-5

களின் பக்கங்களில், குலை: ஒருமை பன்மை மயக்கம். பால்: ஒருமை பன்மை மயக்கம். சமைத்த-கட்டி வைத்துள்ள. யாகத்தடம் சாலை-விசாலமாகிய வேள்விச் சாலைகள்; ஒருமை பன்மை மயக்கம். சூழ்-சூழ்ந்திருக்கும். வைப்பு. இடங்கள்-யாகங்களுக்கு உரிய சமித்துக்களையும் பாலையும் பாத்திரங்களையும் வேறு பண்டங்களையும் வைப்பவை யாகிய இடங்கள். வைப்பு: ஒருமை பன்மை மயக்கம்.

நெருங்கி உள-ஒன்றை ஒன்று நெருங்கி இருக்கின்றன. உள: இடைக்குறை. தொடங்கு-தாங்கள் ஆரம்பித்த சடங்குமங்கலச்சடங்குகளாகிய யாகங்களை; ஒருமை பன்மை மயக் கம். முடித்து-நிறைவேற்றி விட்டு. ஏறும் வேள்வித் தலை வர்-யாகத் தலைவர்கள் ஏறும். தலைவர்: ஒருமை பன்மை மயக்கம். பெரும்-பெருமையைப் பெற்ற தேர்கள்-இரதங்கள் விண்ணோர்.தேவலோகத்தில் வாழும் தேவர்கள்; ஒருமை. பன்மை மயக்கம். ஏறும். ஏறிக் கொண்டுவரும். விமானங்கள். விமானங்களைப் போல அந்தச் சேய்ஞலூரில் இருக்கின்றன.

பிறகு வரும் 7-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: வயல்களுக்கு மண்ணியாற்றிலிருந்து நீர்பாயும் மடை களில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்திருக்கும்; செழுமையான புனல் சுற்றிப் பாயும் வயல்களில் நெற்பயிர்களினுடைய கதிர்களின் தொகுதி நிரம்ப வளர்ந்து நிற்கும் பக்கங்களில் விண்டுகள் நெருங்கி மொய்க்கும் பாக்கு மரங்களும் மண்ணி நீர் பாய்வதால் பரவியுள்ள அழகிய பாளைகள் அந்தக் கமுகமரங்களில் காணப்படும்; இவைகளோடு விளங்கும் நீண்ட தாமரை மலரில் கயல் மீன்கள் உறங்கிக்கொண் டிருக்கும்; மக்கள் நடக்கும் வழிகளில் படர்த்திருக்கும் மென் மையான முல்லைக் கொடியில் அரும்பியிருக்கும் அரும்புக ளோடு அந்த இடத்தில் கிளைகளைப் பெற்ற காஞ்சிமரம் விளங்கும். இத்தகைய காட்சிகளை அந்தச் சேய்ஞலூரில் காணலாம். பாடல் வருமாறு: -