பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ண் டே சுர நாயனார் புராணம் 47

நன்றி-நல்ல செயல்களையே; ஒருமை பன்மை மயக்கம். புரியும்-செய்துவரும். அவர் தம்பால்-அந்த எச்சதத்தனிட மும் அவனுடைய பத்தினியிடமும். அவர் : ஒருமை பன்மை மயக்கம். பால்: ஒருமை பன்மை மயக்கம். நன்மை-பல வகையான நல்ல கருத்துக்களை எடுத்து கூறும்; ஒருமை பன்மை மயக்கம். மறையின்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களினுடைய ஒருமை பன்மை மயக்கம். துறை விளங்கதுறை விளக்கத்தை அடையும் வண்ணம். என்றும்-என்

றைக்கும். மறையோர்-வேதியர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். குலம்-குடும்பங்கள்; ஒருமை பன்மை மயக்கம். 'சாதி எனலும் ஆம். பெருக-தழைத்துப்

பெருக்கத்தை அடையுமாறும். ஏழு புவனங்களும்-ஏழு உலகங்களில் வாழ்பவர்களும்; இட ஆகுபெயர். உய்யஉஜ்ஜீவனத்தை அடையும் வண்ணமும், மன்றில்-சிதம் பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் சிற்சபையாகிய திருச்சிற்றம்பலத்தில். நடம்-திருநடனம். செய்பவர். புரிந்தருளும் நடராஜப் பெருமானாருக்கு உரிய சைவசைவ சமயத்தினுடைய. வாய்மை-உண்மையான தன்மை. வளர-வளருமாறும். மாதவத்தோர்-பெரிய தவத்தைப் புரிந்த தவசிகள், ஒருமை பன்மை மயக்கம். வென்றிதங்களுடைய மெய், வாய், மூக்கு, காதுகள், கண்கள் என்னும் ஐந்து:இந்திரியங்களையும் வென்ற வெற்றி. 'புல னைந்தும் வென்றான்றன் விரமே வீரம்' என வருவதைக் காண்க. விளங்க-திகழுமாறும். வந்து-அந்த எச்ச தத்தனுக் குப் புதல்வராக வந்து.உதயம் செய்தார்-திருவவதாரம் செய் தருளினார். விசாரசருமனார்-விசார சருமர் என்பவர். . அடுத்து உள்ள 13-ஆம் கவியின் கருத்து வருமாறு: 'அந்த விசார சருமருக்கு ஐந்து பிராயங்கள் அடைய வேதங்களினுடைய அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், சோதிடம், கற்பம் என்னும் ஆறையும்