பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டேசுர நாயனார் புராணம் 479

திடம்நேர் கிற்கும் செம்ம் லார்

திகழும் நாளில் ஆங்கொருங்ாள்.'"

இந்தப் பாடல் குளகம். நடம்-சிதம்பரத்தில் உள்ள திருக்கோயிலில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திரு நடனம். ஏ:அசை நிலை. புரியும்-புரிந்தருளும். சேவடியார்-செந்தா மரை மலர்களைப் போலச் சிவந்து விளங்கும் திருவடிகளைப் பெற்றவராகிய நடராஜப் பெருமானாரே, அடி: ஒருமை பன்மை மயக்கம். நம்மை-அடியேங்களை; இது சேக்கிழார் தம்மையும் விசாரசரு மரையும் சேர்த்துக் கூறியது. உடை யார்-ஆட்களாக உடையவர். எனும்-என்று எண்ணும்: இடைக்குறை. மெய்ம்மை-உண்மை. உடனே-அந்த விசார சருமருக்கு ஏழு பிராயங்கள் நிரம்பிய உடனே. தோன்றும்உண்டாகும். உணர்வின்கண்-உணர்ச்சியினிடத்திலிருந்து. ஒழியாது-போகாமல். ஊறும்-தம்முடைய திருவுள்ளத்தில் ஊறி எழும். வழி அன்பின்-வழியில் அமைந்த பக்தியினால். கடனே-தம்முடைய கடமைகளையே; ஒருமை பன்மை மயக் கம். இயல்பாய்-இயல்பாகவே. முயற்றி வரும்-இடைவிடா மல் புரிந்து கொண்டு வரும். காதல்-விருப்பம். மேன் மேல்மேலும் மேலும். எழும்-எழுந்து விளங்கும். கருத்தின்-தம்மு டைய திருவுள்ளத்திற் கொண்ட திடம் உறுதியில். நேர் நிற்கும்-நேர்மையோடு நிலைபெற்று நிற்கும். செம்மலார்சிறப்பைப் பெற்றவராகிய அந்த விசாரசருமனார். திகழும்இவ்வாறு விளங்கும். நாளில்-காலத்தில். ஆங்கு அந்தச் சேய்ஞலூரில். ஒரு நாள்-ஒரு தினம். :

அடுத்து உள்ள 17-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

‘தாம் வேதங்களை அத்தியயனம் செய்யும் வேத வாட சாலையில் அத்தியயனம் புரியும் பிரமசாரிகளோடு செல்பவ ச்ாகிய அந்த விசார சருமர் தம்முடைய ஊராகிய சேய்ஞலூா சில் வாழும் வேதியர்களுக்குச் சொந்தமான் பசுமாடுகளின் வரிசையோடு மேய்ச்சல் நிலத்துக்குச் சென்ற சமயத்தில் அந்த நிலத்தில் சன்தணிமையுள்ள ஒரு பசுமாடு தன்னைப்