பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 பெரிய புராண تهerبوساقع غ

பாவும்-பரவியிருக்கும். கலைகள்-அறுபத்து நான்கு கலை. களையும். ஆகம.சைவ ஆகமங்களாகிய, ஒருமை பன்மை மயக்கம். நூல்-சாத்திரங்களினுடைய ஒருமை பன்மை. மயக்கம். பரப்பின்-பரப்பைப் பெற்ற. தொகுதிதொகுதியைப் பெற்றவையும்; ஆகு பெயர். ப்:சந்தி. பான் மையினால் - தன்மையால். மேவும் - பொருந்தியிருக்கும். பெருமை-பெருமையைப் பெற்றவையும்; ஆகு பெயர். அருபொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ளவையும்: ஆகுபெயர்.மறைகள்-ஆகிய இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்க வளின், மூலமாக-வழியாக விளங்கு-திகழும். உலகில்-இந்தப். பூ மண்டலத்தில் யாவும்-எல்லா நூல்களையும். தெளிந்ததெளிவாகக் கற்று அறிந்து கொண்ட பொருள்-அர்த்தத் தின். நிலை-நிலையை. என்றது அந்த அர்த்தமாக விளங்கு. பவர் நடராஜப் பெருமானார் என்ற உண்மையைத் தெரிந்து கொண்டதை. ஏ: அசை நிலை. எய்த-அடைவதற்கு. உணர்ந்த-தெரிந்து கொண்ட, உள்ளத்தால்-தம்முடைய திருவுள்ளத்தினால், ஆவின் பெருமை-பசு மாட்டினுடைய பெருமையை. உள்ளபடி உள்ளவாறு அறிந்தார்-தெரிந்து கொண்டவராகிய அந்த விசார சருமர். ஆயற்கு-அந்தப் பசு, மாட்டை அடித்த அந்த இடைய்னுக்கு அருள்செய்வார்-பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்வாரானார்.

அடுத்து உள்ள 19-ஆம் கவியின் கருத்து வருமாறு: - 'இந்தப் பூமண்டலத்தில் தங்கி வாழும் எண்பத்துதான்கு. லட்சங்களாகிய எல்லா யோனிகளுக்கும் மேலாக விளங்கும் பெருமையையும் தகுதியையும் பெற்றவை பசுமாடுகள்; பொங்கி எழும் தூய்மையாக உள்ள தீர்த்தங்கள் யாவும் எந்தக் காலத்திலும் தம்முடைய உடம்புகளில் அமைந்திருப் பவை அந்தப் பசு மாடுகள்: பரிசுத்தர்க ளாகிய தேவர்களும், அழகிய முனிவர்களும், - சிவகணங்களும் சேர்ந்திருந்து பிரியாத உறுப்புக்கள் எல்லாவற்றையும் தாங்கள் பெற்றவை.