பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 487

காலம் முழுதும் உலகனைத்தும்

காக்கும் முதற்கா ரணராகும் நீல கண்டர் செய்யசடை

கிருத்தர் சாத்தும் நீறுதரும் மூலம் அவதாரம்செய்யும்

மூர்த்தம் என்றால் முடிவென்னோ?” சிலம்-நல்ல பண்பை உடைய-பெற்ற. கோ-பசுமாடுகளி னுடைய, ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. குலங்கள்-கூட்டங் கள். சிறக்கும்-சிறப்பை அடைந்திருக்கும். தகைமை-தகுதி யாகிய பான்மையைப் பெற்றவையாகி. த்:சந்தி. தேவருடன்தேவர்களோடு; ஒருமை பன்மை மயக்கம். காலம் முழுதும்காலம் முழுவதிலும். உலகு-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். அனைத்தும்-அனைவரையும்; திணை மயக்கம். காக்கும்-பாதுகாக்கும். முதல்-முதல்வரும். காரணர் ஆகும்.எல்லா உலகங்களையும் வேதங்களையும் உண்டாக்கும் காரண புருஷராக விளங்கும். நீல கண்டர்-ஆல கால விடத்தை விழுங்கியமையால் நீலமாகிய திருக்கழுத் தைப் பெற்றவரும். செய்ய-சிவந்த சடை-சடாபாரத்தைத் தம்முடைய தலையில் பெற்றவருமாகிய; ஆகு பெயர். நிருத் தர்-சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம் பலத்தில் திருநடனம் புரிந்தருளுபவரும் ஆகிய நடராஜப் பெருமானார். சாத்தும். அணிந்து கொள்ளும் நீறு-விபூதியை. தரும்-வழங்கும். மூலம்-மூலமான விலங்கு: ஆகு பெயர். அவதாரம் செய்யும்-திருவவதாரம் செய்தருளும், மூர்த்தம்வடிவை உடைய விலங்கு. என்றால் என்று கூறினால். முடிவு -அவ்வாறு கூறுவதற்கு முடிவு. என்னோ-எதுவோ? முடிவே இல்லை என்பது கருத்து.

யாரையும் முட்டாமல் சாதுவாக இருப்பதனால் பசு மாட்டைச் சீலம் உடையது என்றார். தேவர்களுக்கு யாகாக் கினியில் சொரியும் பால் முதலியவற்றைத் தருவதால் பசு மாடு தேவர்களைக் காப்பதாயிற்று, உலகத்தில் வாழ்பவர்