பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 491

இனிமேல் இந்தப் பசுமாடுகளினுடைய வரிசையைப் புல் வெளியில் மேயுமாறு செய்வேன்.' என்று திருவாய் மலர்ந் தருளிச் செய்தார்: அந்த ஆயனும் அச்சத்தை அடைந்து அந்த விசாரசருமருக்கு நேரில் அவரை வணங்கிப் பசுமாடு களை மேய்ப்பதை விட்டு விட்டுப் போய்விட்டான்; அந்த விசாரசருமரும் சேய்ஞலூரில் வாழும் வேதியர்களினுடைய சம்மதத்தோடு பசுமாடுகள் செறிந்திருக்கும் பெரிய கூட் டத்தை மேய விட்டுப் பாதுகாப்பவராகிப் பசுமையாகிய பயிர்களுக்கு மேகம் பொழியும் மழை என்று கூறுமாறு அந்தப் பசுமாடுகளினுடைய வரிசையை மேய விட்டுப் பாது காக்கும் பொருட்டு தெய்வத் தன்மையைப் பெற்ற இளைய வேதியராகிய விசாரசருமர் புல்வெளிக்கு எழுந்தருளினார்." பாடல் வருமாறு: z:

'யானே இனிஇந் நிரைமேய்ப்பன்"

என்றார்:அஞ்சி இடைமகனும் தான்கேர் இறைஞ்சி விட்டகன்றான்; தாமும் மறையோர் இசைவினால் ஆனே நெருங்கும் பேராயம்

அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு வானே என்ன கிரைகாக்க

வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.” யானே-விசாரசருமர் அந்த இடையனைப் பார்த்து*நானே. இனி-இனிமேல். இந்நிரை.இந்தப் பசுமாடுகளி ஆணுடைய வரிசையை, மேய்ப்பன்-புல்வெளியில் மேயுமாறு புரிவேன். என்றார்-என்று திருவாய் மலர்ந்தருளிச் செய் தார். அஞ்சி-அச்சத்தை அடைந்து. இடை மகனும்-அந்த இடையனாகிய ஆடவனும். தான்: அசை நிலை. நேர்-அந்த விசாரசருமருக்கு நேரில், இறைஞ்சி-அவரை வணங்கிலிட்டு. விட்டு-அந்தப் பசுமாடுகளை மேய்ப்பதை விட்டு விட்டு. அகன்றான்-அந்தப் புல் வெளியிலிருந்து போய் விட்டான். *தாமும்’ என்றது ‘விசாரசருமரும்’ என்பதை. மறையோர்