பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 495

இனிய சுவைன்யப் பெற்ற. ப்:சந்தி. பால்-பாலை. உதவும். அந்தப் பசு மாடுகள் தங்களுடைய மடிகளிலிருந்து வழங்கும். பொழுது-நேரங்கள்; ஒருமை பன்மை மயக்கம். பிழையாமல்தவறாமல், உடையோர்-சேய்ஞலூரில் வாழ்பவர்களாகிய அவற்றை உடைய வேதியர்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். இல்லம்தொறும்-திருமாளிகைகள் ஒவ்வொன்றிற் கும். இல்லம்: ஒருமை பன்மை மயக்கம். உய்த்தார்-அழைத் துக் கொண்டு சென்று அவற்றை விட்டார்,

பிறகு உள்ள 27-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "சேய்ஞலூரில் ஒடும் மண்ணியாற்றினுடைய கரைகளில் பலவகை மரங்கள் வளரும் முல்லை நிலமாகிய காட்டின் பக் கங்களிலும், பள்ளங்களினுடைய பக்கங்களிலும், குளிர்ச்சி யைப் பெற்ற முத்துக்களைச் சங்குப் பூச்சிகள் உமிழும் நீர் நிலைகள் விளங்கும் மருத நிலத்தில் உள்ள சோலைகளைச் சுற்றியிருக்கும் மண்ணியாற்றினுடைய கரைகளைச் சார்ந்த இடங்களிலும் கணக்கில் பெருகியிருக்கும் பசுமாடுகளினு: டைய வரிசையைப் புற்களை மேயச் செய்து அந்த விசார சருமர் சமிதைகளோடு மேலே எரியும் நெருப்பை எடுத்துக் கொண்டு எழுந்தருளி இரவு நேரத்துக்கு முன்னால் அந்தப் பசு மாடுகளை அழைத்துக் கொண்டு அவற்றை உடைய வேதியர்களினுடைய திருமாளிகைக்குள் நுழைந்தும் அவற்றை விட்டு விட்டும் நல்ல தினங்கள் பலவாக இருக்கும் அந்தக் காலத்தில். பாடல் வருமாறு:

  • மண்ணிக் கரையின் வளர்புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் தண்ணித் திலகீர் மருதத்தண்

டலைசூழ் குலையின் சார்பினிலும் எண்ணிற் பெருகும் கிரைமேயத்துச்

சமிதை யுடன் மேல் எரிகொண்டு கண்ணிக் கங்குல் முன் புகுந்தும்

கன்னாள் பலவாம் அங்காளில்.”