பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் - 513

தில்-திருவுள்ளத்தில் இருந்த, ஒருமை-ஒருமைப்பாடு உள்ள . நினைவால்-எண்ணத்தினால், உம்பர்-தேவர்களினுடைய; ஒருமை பன்மை மயக்கம். பிரான்-தலைவனாகிய நடராஜப் பெருமான். உவக்கும்-மகிழ்ந்து ஏற்றுக் கொள்ளும். பூசைபூசையினுடைய. உறுப்புஆன-அங்கங்களாக உள்ள. உறுப்பு: ஒருமை பன்மை மயக்கம். திருமஞ்சனம்-அபிடேகத்துக்குரிய பசுமாட்டின் பால், மண்ணியாற்றின் நீர், தேன், தயிர், நெய், மஞ்சள் நீர் முதலியவற்றில்; ஒருமை பன்மை மயக்கம். ஏ: அசை நிலை. முதலவற்றில்-முதலியவற்றில். தேடாதன. தாம் தேட முடியாதவற்றை. அன்பினில்-பக்தியினால், உருபு மயக்கம். நிரப்பி-பாவனையாக நிரம்பும் வண்ணம் புரிந்: தருளி. வரும்-தாம் புரிந்து வரும். அந்நெறியே-அந்த வழியி லேயே. அர்ச்சனை செய்தருளி-தாம் மணல்களைக் குவித்துத் தாபித்திருந்த அந்தச் சிவலிங்கப் பெருமானுக்கு அருச் சனையை அவர் புரிந்தருளி. வணங்கி-அந்தப் பெருமானைப் பணிந்து. மகிழ்கின்றார்-மகிழ்ச்சியை அடைகிறவரானார். பிறகு உள்ள 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'இறைவனாகிய அந்தச் சிவலிங்கப் பெருமானுடைய திருவடிகளின் கீழ் வேதியச் சிறுவராகிய அந்த விசாரசருமர் தம்முடைய கைகளில் எடுத்துக்கொண்டு அபிடேகம் புரிந் தருளும் எல்லாப் பண்டங்களும் நிரம்பியுள்ள பூசைக்கு குடங் களில் நிரப்பிய பாலை மிகுதியாகத் தங்களுடைய மடிகளில் உள்ள முலைகளிலிருந்து பெருகிவருமாறு பொழிந்து பசுமாடு களினுடைய வரிசையாக இருந்த கூட்டங்கள் ஒரு குறைவு படுதலும் இல்லாமல் தங்களுடைய மடிகளிலிருந்து பெருகு மாறு மிகுதியாக அமைந்த தங்களுடைய முலைகளிலிருந்து சுரக்கும் இனிய சுவையைப் பெற்ற பாலை ஒரு குறைவும் இல்லாமல் சேய்ஞலூரில் வாழ்ந்திருக்கும் வேதியர்கள் தங்கி யிருக்கும் திரு மாளிகைகளினுடைய முன்னால் விசாரசருமர் கொண்டு போய் வழங்கும் வளங்கள் விளங்குமாறு அந்தப் _சுமாடுகள் தங்கியிருக்கும்." பாடல் வருமாறு: سی