பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 பெரிய புராண விளக்கம்

குறை. தன்: அசை நிலை. அழைமின்-இங்கே அழைத்துக் கொண்டுவாருங்கள். அவையில்-அந்தச் சேய்ஞலூரில் உள்ள நியாயசபையில். - இருந்தார்கள்-அமர்ந்திருந்த வேதியர்கள். என்றார்-என்று கூறினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். பிறரு உள்ள 41-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அந்த நியாயசபையினுடைய பக்கத்தில் நின்று கொண் டிருந்த மக்கள் அந்த வேதியனாகிய எச்சதத்தன் வாழ்ந் திருக்கும் அழகிய திருமாளிகையினுடைய பக்கத்திற்குப் போய் அந்த எச்சதத்தனைத் தங்களோடு கூட்டிக் கொண்டு. வரப் புகழ் பரவி அமைந்த உயர்ச்சியைப் பெற்ற அந்த நியாய சபையில் அமர்ந்திருக்கும் வேதியர்கள் அந்த எச்சதத்தனை நோக்கி, இந்தச் சேய்ஞலூரில் உள்ள பசுமாடுகளினுடைய வரிசையைப் புல்வெளியில் முளைத்திருக்கும் புற்களை மேயு, மாறு செய்து உன்னுடைய புதல்வனாகிய விசார சருமன் புரியும் தீய செயலை நீ கேட்பாயாக." என்று நடந் , செயலைக் கூறுபவர்களானார்கள். பாடல் வருமாறு: * ஆங்கு மருங்கு நின்றார்கள் -

அவ்வங் தணன்தன் திருமனையின் பாங்கு சென்று மற்றவனை

அழைத்துக் கொண்டு வரப்பரந்த ஓங்கு சபையோர் அவனைப்பார்த்

'தூரான் கிரைமேய்த் துன்மகன் செய் தீங்கு தன்னைக் கேள்' என்று - புகுந்த பரிசு செப்புவார்.' ஆங்கு-அந்த நியாய சபையினுடைய.மருங்கு-பக்கத்தில். நின்றார்கள்-நின்று கொண்டிருந்த மக்கள். அவ்வந்தனன் தன்-அந்த வேதியனாகிய எச்சதத்தன் வாழ்ந்து வரும், திரு. அழகிய மனையின்-திருமாளிகையினுடைய. பாங்கு-பக்கத் திற்கு. சென்று-போய். மற்று:அசை நிலை. அவனை-அந்த எச்சதத்தனை அழைத்துக் கொண்டு-கூட்டிக் கொண்டு. வர-அந்த் நியாய சபைக்கு வர. ட்:சந்தி. பரந்த-பரவலாக