பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 52.

வந்தி மலர்கள், கொய்யா மலர்கள் முதலியவை. புனல்-நீர் ஒடும். மண்ணி-மண்ணியாற்றின் கரையில் உள்ள இட ஆகு பெயர். மணலில் மணல்களில்; ஒருமை பன்மை மயக்கம். கறந்து-அந்தப் பசு மாடுகளினுடைய மடிகளில் இருக்கும் முலைகளிலிருந்து பாலைக் கறந்து கொண்டு. பால் அந்தப் பாலை. உகுத்து-தரையில் சிந்தி. உவந்த-தாம் மகிழ்ச்சியை

அடைந்த பரிசே-வகையிலேயே, செய்கின்றான்-அந்த விசார சருமன் புரிகின்றான். என்றான்-என்று அந்த மனிதன் கூறினான். என்று-என வாய்-உண்மையை. மொழிந்

தார்-அந்த நியாய சபையில் அமர்ந்திருந்த வேதியர்கள் கூறினார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 43-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தச் சேய்ஞலூரில் உள்ள நியாய சபையில் அமர்ந்து இருக்கும் வேதியர்கள் இவ்வாறு கூற அதனைக் கேட்டு அச்சத்தை அடைந்து, 'சிறிய பிரமசாரியும் என்னுடைய புதல்வனும் ஆகிய விசார சருமன் புரிந்த இந்த அடாத காரி யத்தைச் சிறிதளவும் அடியேன் முன்பு தெரிந்து கொள்ள வில்லை; இதற்கு முன்பு நடந்ததை நிறைந்து விளங்கும் பெருமையைப் பெற்ற வேதியர்களே, தாங்கள் யாவரும் இந்த அடாத செயலைப் பொறுத்தருள வேண்டும் என்று அந்த எச்சதத்தன் கூறிவிட்டு தன்னுடைய உள்ளத்தில் அந்த மானக் குறைவாக உள்ள செயலை நினைத்துக் கொண்டு அந்த வேதியர்களை வணங்கி, இனிமேல் இத்த கைய அடாத செயல் நடந்தால் அதனால் உண்டாகும் குற்றம் அடியேனுடையதே ஆகும்' என்று அந்த எச்சதத்தன் கூறினான். பாடல் வருமாறு:

மறையோர் மொழியக் கேட்டஞ்சிச்,

சிறுமா ணவகள் செய்தஇது இறையும் நான்முன் பறிந்திலேன்:

இதற்கு முன்பு புகுந்ததனை