பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528. பெரிய புராண விளக்கம்

பாற்குடங்களை எடுத்துக் கொண்டு வந்து அவர் விருப் பத்தை அடைந்து அபிடேகம் புரிந்தவுடன். பாடல் வருமாறு:

நின்ற விதியின் விளையாட்டால்

நிறைந்த அரும்பூ சனைதொடங்கி ஒன்றும் உள்ளத் துண்மையினால் உடைய நாதன் திருமுடிமேல் மன்றல் விரவும் திருப்பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமா நன்று கிறைதீம் பாற்குடங்கள்

எடுத்து நயப்புற் றாட்டுதலும்.” இத் தப் பாடல் குளகம். நின்ற-அந்த விசார சருமர் தம் மிடம் வந்து நிலைத்து நின்ற. விதியின்-தலை விதியினுடைய விளையாட்டால்-திருவிளையாட்டினால், நிறைந்த-நிரம்பி இருந்த, அரும்-செய்வதற்கு அருமையாக விளங்கும். பூசனை" பூசையை தொடங்கி-புரிய ஆரம்பித்து. ஒன்றும்-ஒருமைப் பாட்டோடு விளங்கும். உள்ளத்து-தம்முடைய திருவுள்ளத் தினுடைய. உண்மையினால்-உண்மையாகிய பக்தியோடு: உருபு மயக்கம். உடைய-தம்மை ஆளாக உடைய. நாதன்அந்த மணல்களைக் குவித்துத் தாம் தாபித்திருந்த தலைவ னாகிய சிவலிங்கப் பெருமானுடைய. திரு-அழகிய முடிமேல் -தலையின் மீது. மன்றல்-நறுமணம். விரவும்-கமழும். திருப் பள்ளித் தாமம்-திருப்பள்ளியெழுச்சியின் போது சாத்தும் மாலையை சாத்தி-அணிந்து. மஞ்சனமா-அபிடேகத்துக்கு உரிய பொருளாக. நன்று-நன்றாக. நிறை-தாம் நிரப்பி யிருந்த, பால்-இனிய சுவையைப்பெற்றபால் உள்ள குடங்கள் -குடங்களை. எடுத்து-எடுத்துக் கொண்டு வந்து, நயப்புற்றுஅவர் விருப்பத்தை அடைந்து. ஆட்டுதலும் அந்தச் சிவலிங் கப் பெருமானுக்கு அபிடேகம் புரிந்தவுடன்.

பிறகு உள்ள 48-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த விசார சருமரிடத்தில் பரவலாக மேலும் மேலும்