பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o:52 பெரிய புராண விளக்கம்-5

- ஆனாய நாயனார் தம்முடைய செந்தாமரை மலர் களைப் போலச் சிவந்த திருவடிகளில் செருப்புக்களும், செந்தாமரை மலரைப் போலச் சிவந்த தம்முடைய திருக் கரத்தில் வெண்மையான தடியும், பொருந்தும் சங்கீதத்தை எழுப்பும் மூங்கிலால் அமைந்திருக்கும் பாட்டை, ஊதும் புல்லாங்குழலும் மிகுதியாகத் திகழ தங்க ளு ை- ய தொழில்களைப் புரியும் காவல் காத்தலைச் செய்யும் வன்மை. யைப் பெற்ற இடையர்களும், கன்றுக் குட்டிகளை உடைய பசுமாடுகளின் வரிசை தம்மைச் சுற்றி வர, மலர்கள் மலர்ந்த மாலையை அணிந்தவரும், பசுமாடுகளை மேய்ப் பவரும் ஆகிய அந்த நாயனார் பசுமாடுகளினுடைய வரி சையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தம்முடைய திருமாளி கைக்கு வெளியில் வந்தருளினார். பாடல் வருமாறு:

சேவடியில் தொடுதோலும் செங்கையினில் வெண்கோலும்

மேவும்இசை வேய்ங்குழலும் மிகவிளங்க வினைசெய்யும் காவல்புரிவல்லாயர் கன்றுடைஆன் கிரைசூழப் பூவலர்தார்க் கோவலனார் நிரைகாக்கப் புறம்போக்தார்.” சேவடியில்-ஆனாய நாயனார் தம்முடைய செந்தா மரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளில். அடி: ஒருமை பன்மை மயக்கம். . தொடுதோலும்-செருப்புக்களும்,' ஒருமை பன்மை மயக்கம். செங்கையினில்-செந்தாமரை மலரைப் போலச் சிவந்த தம்முடைய திருக்கரத்தில், வெண்வெண்மை நிறத்தைக் கொண்ட கோலும்-தடியும். மேவும்அமைந்திருக்கும். இசை-பாட்டை ஊதும். வேய்-மூங்கிலால் செய்யப் பெற்ற. ங்:சந்தி. குழலும்-புல்லாங்குழலும், மிகமிகுதியாக விளங்க-திகழ வினை-தங்களுக்குரிய தொழில் களை ஒருமை பன்மை மயக்கம். செய்யும்-புரியும். காவல்ಹTaು காத்தலை. புரி-செய்யும். வல்-வலிமையைப் பெற்ற ஆயர்-இடையர்களும்; ஒரும்ை புன்மை மயக்கம். கன்று-கன்றுக்குட்டிகளை ஒருமை பன்மை மயக்கம்.