பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனாய நாயனார் புராணம் - 67.

ஆனிரைகள் அறுகருந்தி அசைவிடா தணைந்தயரப் பானுரைவாய்த் தாய்முலையிற் பற்றும்இளங் கன்றினமும் தானுணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும் மான்முதலாம் கான்விலங்கும் மயிர்முகிழ்த்து o so ·

வந்தணைய. இந்தப் பாடலும் குளகம். ஆன்-பசுமாடுகளினுடைய: ஒருமை பன்மை மயக்கம். நிரைகள்-வரிசைகள். அறுகு-அறு. கம் புற்களை; ஒருமை பன்மை மயக்கம். அருந்தி-மேய்ந்து. அசைவிடாது-அசை போடாமல். அணைந்து - தம்முடைய பக்கத்தை அடைந்து. அயர-செயல் இழந்து நிற்க. ப்: சந்தி. பால்-பாலின், நுரை-நுரையை. வாய்-தங்களுடைய வாய்களை; ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. தாய்-தங்க ளுடைய தாய்ப் பசுமாடுகளினுடைய, ஒரும்ை பன்மை மயக் கம். முலையில்-முலைகளை ஒருமை பன்மை மயக்கம்; உருபு மயக்கம். பற்றும்-கவ்விக் கொள்ளும். இளம்-இள மைப் பருவத்தைப் பெற்ற. கன்று-கன்றுக் குட்டிகளின், ஒருமை பன்மை மயக்கம். இனமும்-கூட்டமும். தான்.அச்ை நிலை. உணவு-தங்களுடைய உணவாகிய புற்களை ஒருமை, பன்மை மயக்கம். மறந்து ஒழிய-மேய்வ ை மறந்து விட, த்:சந்தி. தட-விசாலமான; பெரிய மருப்பின்-கொம்புகளைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். விடை-காளை மாடுகளி: னுடைய, ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. குலமும்-கூட்ட மும். மான் முதலாம்-மான் முதலாகும். கான்-காட்டில், வாழும். விலங்கும்-மிருகங்களும்; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: சிங்கம், புலி, வேங்கைப் புலி, யானை, ஓநாய், நரி, கரடி, செந்நாய், காட்டெருமை மாடு, காட்டுப்பசு. முதலியவை. மயிர்-தங்களுடைய உடம்புகளில் உள்ள மயிர் களை ஒருமை பன்மை மயக்கம். முகிழ்த்து-அரும்புகளைப்: போலச் சிலிர்த்துக் கொண்டு. வந்து-ஆணாய நாயனாரிடம், வந்து. அணைய-சேர. -

அடுத்து உள்ள 81-ஆம் பாடலின் கருத்து வருமாறு: