பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of Tu நாயனார் புராணம் 7?

மயக்கம். அமுது-பாலை. ஊட்டும்-குடிக்கச் செய்யும். கணிகோவைப் பழங்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். வாய்-வாய்களைப் பெற்ற: - ஒருமை பன்மை மயக்கம். மென்-மென்மையான, கிள்ளையுடன்-கிளிகளோடு; ஒருமை பன்மை மயக்கம். விரவுநறும்-நறுமணம் பரவிய. குழல்-தங் களுடைய கூந்தல்கள்; ஒருமை பன்மை மயக்கம். அலையஅவிழ்ந்து புரள. விமானங்கள்-விமானங்களில். விரைந்துவேகத்தை அடைந்து. ஏறி-ஏறிக் கொண்டு. ப்: சந்தி. பரவிய-எங்கும் பரவிய. ஏழிசை-ஆளாய நாயனார் ஊதும் புல்லாங்குழலிலிருந்து வரும் ச, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுவரங்களைப்பெற்ற சங்கீதமாகிய.அமுதம்-அமுதத்தை. செவி-தங்களுடைய காதுகளால்; ஒருமை பன்மை மயக்கம். மடுத்து-கேட்டு. ப்: சந்தி. பருகினார்-குடித்தார்கள்; ஒருமை பன்மைமயக்கம். செவிவாயாக நெஞ்சுகளனாகக் கேட்டவை. கேட்டவை.” (40) என்று நன்னூலில் வருவதைக் காண்க.

பிறகு உள்ள 34-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

பிறரைத் துன்புறுத்துபவர்களும், பிறரால் துன்பத்தை அடைந்து மெலிவை அடைபவர்களும் தங்களுடைய உணர்ச்சி ஒன்றாக அமைய ஆனாய நாயனார் புல்லாங் குழலில் ஊதும் கீதநாதத்தை விரும்புவதனால் மிகுதியான வாயில் வெண்மையான பற்களைக் கொண்ட பாம்பு, அந்தக் கீதநாதத்தைக் கேட்க வந்த மயிலின் மேல் மயங்கி விழும்: நடுங்காத நிலையைப் பெற்ற சிங்கமும் விசாலமான யானை யும் ஒருங்கே அந்தக் கீதநாதத்தைக் கேட்கும் பொருட்டு வந்து சேரும்; புற்களைத் தன்னுடைய வாயில் கொண்ட மானும் புலியினுடைய வாய்க்குப் பக்கத்தில் வந்து சேரும்.” பாடல் வருமாறு:

' கலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றாய் நயத்தலினால் மலிவாய்வெள்ளெயிற்றரவம் மயில்மீது மருண்டுவிழும்: சலியாத நிலைஅரியும் தடங்களியும் உடன்சாரும்: புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்.'