பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பெரிய புராண விளக்கம் -5.

பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவில் கடம்புரியும்

ஐயன்றன் திருச்செவியின் அருகணையப் பெருகியதால்.'" - மெய்-உண்மையான. அன்பர்-பக்தராகிய ஆனாய நாய: னார். மனத்து-தம்முடைய திருவுள்ளத்தில் இருந்த. அன்பின் - பக்தியினால். விளைந்த - உண்டான. இசைஇசையை ஊதும், க்: சந்தி. குழல்-புல்லாங்குழலின். ஒசைகீத நாதம். வையந்தன்னையும்.இந்தப் பூமண்டலத்திலும்: உருபு மயக்கம். தன்: அசை நிலை. நிறைத்து-நிறையச் செய்து. வானம்-தேவலோகத்தை. தன்-தன்னுடைய வயம். ஆக்கி-வசமாகச் செய்து. ப்:சந்தி. பொய்-பொய்யான. அன் புக்கு-போலிப் பக்திக்கு. எட்டாத-எட்ட முடியாத, பொற். பொதுவில் - சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் பொன்னம்பலத்தில். நடம்-திருநடனம், புரியும்-புரிந்தருளும், ஐயன் தன்-ஐயனாகிய நடராஜப் பெருமானுடைய. தன்; அசை நிலை. சிவபெருமானை ஐயன் என்று குறிப்பிடும் இடங்: களை வேறோரிடத்தில் காட்டினோம்;ஆண்டுக் கண்டுணர்க. திரு-அழகிய, ச்:சந்தி. செவியின்-திருக்காதுகளின்; ஒருமை பன்மை மயக்கம். அருகு-பக்கத்தை. அணைய-அடையுமாறு. ப்: சந்தி. பெருகியது. பெருகி முழங்கியது. ஆல்: ஈற்றசை நிலை,

அடுத்து வரும் 38-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

ஆனாய நாயனார் ஊதிய புல்லாங்குழலின் கீத. நாதத்தைச் செவிமடுத்தருளி திருவருளும் கருணையும். தானே ஆகிய திருவுள்ளத்தைப் பெற்ற தவத்தைப் புரிந்த பூங்கொடியைப் போன்றவளாகிய சிவகாம சுந்தரியோடு: கானத்தின் முதற் காரணராக விளங்குபவரும், நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவரும் ஆகிய நடராஜப் பெருமா னார்இடபவாகனத்தை ஒட்டிக்கொண்டு வானத்தின் வழியே பிறைச் சந்திரன் தங் கும் சடாபாரம் தொங்க எழுந்தருளி, அந்த நாயனார் இருந்த இடத்துக்கு வந்தார். பாடல். வருமாறு: -