பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 பெரிய புராண விளக்கம்-5

டாகியது. மருட்சி, அது போனதை எண்ணி வியப்பைப் பெற்றது. முதல்வன்-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவ னாகிய அந்த வீரட்டானேசுவரனுடைய கருணை-க நணை யாகிய, க்:சந்தி. கடல்-சமுத்திரத்தில் முழுகினர்-அந்த மருணிக்கியார் முழுகினார். ஏ:ஈற்றசை நிலை. -

அடுத்து உள்ள 72-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்த மருணிக்கியார் தம்முடைய உறுப்புக்கள் முழுவ தும் மயிர்கள் எல்லாம் முழுவதும் புளகாங்கிதங்கள் அரும்பி மலர பொங்கி எழும் நீரைத் தம்முடைய விழிகள் சொரிந்து தரையில் இறங்க அவர் தரையின் மேல் விழுந்து புரண்டு சோர்வை அடைபவராகி, 'இந்தத் திருவ திகை வீரட்டானத் தில் அடியேன் செய்யப் புகுந்த தவறாகிய அதனால் ஏற முடியாத பெரியதாக இருக்கும் மேட்டின் மேல் அடியேன் ஏறும் வண்ணம் தேவரீருடைய என்றும் தங்கி விளங்கும் கருணையாகிய பெரிய ஆற்றின் வெள்ளத்தில் அடியேனை ஆழ்த்துவதற்கு அடியேன் தகுதியை உடையவனோ?' 'என்று இத்தகைய வார்த்தைகளை அந்த மருணிக்கியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரானார். பாடல் வருமாறு:

- ' அங்கங்கள் அடங்கஉ ரோமமெலாம்

அடையப் புளகங்கள் முகிழ்த்தலரப் பொங்கும்புனல் கண்கள் பொழிந்திழியப்

புவிமீது விழுந்து புரண்டயர்வார் "இங்கென்செயலுற்ற பிழைப்பதனால் ஏறாத பெருந்திடர் ஏறிடகின் தங்கும்கருணைப்பெரு வெள்ளமிடத்

தகுமோ?' என இன்னன தாம்மொழிவார்.' அங்கங்கள்-அந்த மருணிக்கியார் தம்முடைய உறுப்புக் கள். அடங்க-முழுவதும், உரோமம்-மயிர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எலாம்-எல்லாம்: இடைக் குை ந: அடையமுழுவதும். ப்:சந்தி. புளகங்கள்-புள்காங்கிதங்கள் ஆகிய