பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 173:

கல்-எல்லா உலகங்களிலும் வாழும் உயிர்களை; இடஆகு. பெர். முடிவு-இறப்பைப் பெறுமாறு. ஆக்கும்-செய்யும். துயர்-துயரம். நீங்க-போகும் பொருட்டு. முன்னை-முன் ஒரு காலத்தில் திருமால் பள்ளி கொண்டருளிய பாற்கடலில் எழுந்த விடம்-ஆலகால நஞ்சு. அமுது ஆனால்-அமுதத். தைப் போல ஆகிவிடுமானால். படி-தம்முடைய திருவுருவம். யார்க்கும்-எந்த மக்களுக்கும் தேவர்களுக்கும். அறிவரியதெரிந்து கொள்வதற்கு அருமையாகிய, பசு-பசுக்களாகிய உயிர்களுக்கு ஒருமை பன்மை மயக்கம். பதியார் தம் முடைய-தலைவராகிய விரட்டானேசுவரருடைய. தம்: அசைநில்ை. அடியார்க்கு-அடியவர்களுக்கு, ஒருமை பன்மை மயக்கம். நஞ்சு-பாம்பின் விடம். அமுதம் ஆவதுதான்அமுதத்தைப் போல ஆவது.தான்: அசைநிலை. அற்புதமோ. ஒரு வியப்பு ஆகுமோ. ஆகாது என்பது க்ருத்து.

பின்பு உள்ள 106-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தச் சமணர்கள் தமக்கு அளித்த அந்தப் பாம்பின் தஞ்சை வீரட்டானேசுவரர் தடுத்து ஆட்கொண்ட திருநாவுக் கரசு நாயனார் திருவமுது செய்தருளித் தங்களுக்கு முன்னான் அமர்ந்து கொண்டிருக்க, நாம் அளித்த கொடிய பாம்பின் நஞ்சும் இவனுக்கு அமுதத்தைப் போல ஆகிவிட்டது' என்று. எண்ணி அந்தச் சமணர்கள் அச்சத்தை மேற்கொண்டு, 'இந்தத் திருவதிகை விரட்டானத்தில் இந்தத் தருமசேன்ை உயிர் போகாமல்.பிழைத்திருப்பவனானால் நமக்கு எல்லாம். முடிவு வந்துவிட்டது' என்று பகைவர்கள் போர் புரியும், போர்க்களத்தில் போராகிய செய்கையைச் செய்யும் தங்க. குடைய மன்னனாகிய அந்தப் பல்லவனுக்கு அந்தச் சமணர்கள் அவனுடைய அரண்மனைக்குச் சென்று கூறுபவர் கணனார்கள். பாடல் வருமாறு: -

'அவ்விடத்தை ஆண்டஅர: சமுதுசெய்து முன்னிருப்ய