பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 239

வழங்கும். இந்த ஊர் திருவெண்ணெய் நல்லூருக்குச் செல்லும் வழியில் பண்ணுருட்டிக்கு மேற்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. 'தடுத்தாட்கொண்டவூர்” என்னும் சிற்றுார் திருவெண்ணெய் நல்லூருக்குக் கிழக்குத் திசையில் ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. இந்தத் தலத்தைப் பற்றிச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடி யருளிய ஒரு பாசுரம் வருமாறு: *

  • பித்தாபிறை சூடீபெரு மானே அரு ளாளா

எத்தால் மறவாதே நினைக் கின்றேன்மனத்துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்

நல்லூரருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேனெனல் ஆமே.” திரு ஆமாத்துார். இது நடுநாட்டில் பம்பையாற்றங் கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப் பவர் அபிராமேசுவரர். அம்பிகை முத்தாம்பிகையம்மை. தலவிருட்சம் வன்னிமரம். இந்தத் தலம் விழுப்புரத்திற்கு வடமேற்குத் திசையில் நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இது பம்பை என்னும் ஒரு சிறிய ஆற்றின் வடகரையில் உள்ளது. பசுக்களுக்குத் தாயகமாக விளங்கும் தலம் இது. இராமபிரான் வழிபட்ட தலம் இது. இந்தத் தலத்தைப் பற்றி இரட்டைப் புலவர்கள் ஒரு கலம்பகத்தைப் பாடி யிருக்கிறார்கள். இந்தத் தலத்தைப் பற்றிய ஒரு பாசுரம் வருமாறு: - 'குராமனும்குழ லாள்.ஒரு கூறனார்

அராமனும்சடை யான் திரு ஆமாத்தூர் இராம னும்வழிபாடுசெய் ஈசனை நிராம யன்றனை நாளும் திணைமினே.” - திருக்கோவலூர்: இது நடுநாட்டில் பெண்ணை யாற் ற்ங்கரையில் உள்ளது. இங்கே கோயில் கொண்டிருப்பவர் வீரட்டேசுவரர். அம்பிகை சிவானந்த வல்லி. இது.