பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236. பெரியபுராண விளக்கம்-இ.

ராகிய திரிகோடீசுவரர். கோடிகாவில் - திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்கோடிகாவை: உருபு மயக்கம். அணைந்து-அந்த நாயனார் அடைந்து. பணிந்துஅந்தத்திரிகோடீசுவரரை வணங்கிவிட்டு. ஆவடுதண்டு றையை.மாசிலாமணி ஈசுவரர் திருக்கோயில் கொண்டு. எழுந்தருளியிருக்கும் குளிர்ச்சியைப் பெற்ற திருவாவடு, துறையை. ச்:சந்தி. சார்ந்தார்.அந்த நாயனார் அடைந் தார்.

திருச் செம்பொன் பள்ளி:இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சொர்ணபுரீசு வரர். அம்பிகையின் திருநாமங்கள் சுகந்த வன நாயகி அம்மை, மருவார்குழலி என்பவை. இது மாயூரத்திலிருந்து கிழக்குத் திசையில் ஆறே முக்கால் மைல் துரத்தில் உள்ளது. இத்திரனும் குபேரனும் வழிபட்ட தலம் இது. இதைப்பற்றிய பாசுரம் ஒன்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடி பருள்யது வருமாறு: -

மருவார் குழலி மாதோர் பாசமாயத் திருவார் செம்பொன் பள்ளி மேவிய கருவார் கண்டத் தீசன் கழல்களை - மருவா தவர்மேல் மன்னும் பாவமே, இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்சுரசு நாயனார் திருநேரிசை, திருக்குறுந் தொகை ஆகிய பாசுரங்கள் அடங்கிய திருப் பதிகங்களைப் பாடியருளி உள்ளார். அவற்றுள் ஒரு திருநேரிசை வருமாறு:

ஊனினுள் உயிரை வாட்டி

உணர்வினார்க் கெரிய ராசி வாணினுள் வான வர்க்கும் அறியலா காத வஞ்சர் தானெனில் தானே என்றும்

ஞானத்தான் அத்தர் நெஞ்சுன்