பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 33

ஆகும். என- என்று; இடைக்குறை. ப்:சந்தி. புகன்று-கூறி.

பிறகு வரும் 55-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தச் சமணர்களாகிய இழிந்தவர்களும் அந்தச் சூலை நோயைப் போக்குவதற்கு முடியாமல் மருணிக்கியாரைத் தங்களுடைய கைகளிலிருந்தும் விட்டு விட்டார்கள்; கொடு மையாக இருக்கும் அந்தச் சூலை நோய் தம்முடைய தலை பின் மேல் ஏறிக் கொண்டு மிகுதியாகப் பெருகி மிகவும் மேலும் மேலும் பெருகி வந்ததனால் அந்தச் சமணர்கள் தங்களுடைய அறிவுகளில் மயக்கத்தை அடைந்து பழைய உறவின் முறையைத் தெரிந்து கொண்டவராகிய அந்த மருணிக்கியாருக்குத் தம்முடைய தமக்கையாராகிய திலகவதி யார் இருப்பவராக எண்ணிக் கொண்டு அந்த மாதரசியாரி டம் தமக்கு உணவைச் சமைத்து உண்ணுமாறு செய்யும் சமையற்காரனைத் தம்முடைய குறித்த எண்ணத்தைத் தேரிவிக்கும் பொருட்டு அனுப்பினார். பாடல் வருமாறு: -

' குண்டர்களும் கைவிட்டார்: -

,கொடும்.சூலை மிசைக்கொண்டு மண்டிமிக மேன்மேலும்

பெருகுதலால் மதிமயங்கிப் பண்டையுற வுணர்ந்தார்க்குத்

திலகவதி யார்உளராக் . கொண்டவர்பால் ஊட்டுவான்

தனைவிட்டார் குறிப்புணர்த்த. குண்டர்களும்-அந்தச் சமணர்களாகிய இழிந்தவர்களும். கைவிட்டார்-அந்தச் சூலை நோயைப் போக்குவதற்கு முடியாமல் மருணிக்கியாரைத் தங்களுடைய கைகளிலிருந்தும்

விட்டு விட்டார்கள்: ஒருமை பன்மை மயக்கம். கொடும்.

கொடுமையாக இருக்கும். சூலை-அந்தச் சூலை நோய், மிசைக் கொண்டு-தம்முடைய தலையின் மேல் ஏறிக் கொண்டு. மண்டிமிக-மிகுதியாகப் பெருகி மிகவும். மேன்