*10 பெரிய புராண விளக்கம்-7 தீர்த்தங்கள், கமலாலயம் முதலிய தீர்த்தங்கள். இது நாகப்பட்டிணத்திற்கு மேற்குத் திசையில் 14 மைல் தூரத்தில் உள்ளது. 'நிறை செல்வத் திருவாரூன்’ என்று இந்தத் தலம் சிறப்பிக்கப் பெறும். இங்கே உள்ள - திருக்கோயிலுக்குத் திருமூலட்டானம் என்றும், பூங்கோயில் என்றும் பெயர்கள் உண்டு. தேங்காவின் ஊறும் திருவாரூர்த் தொன்னகரிற், பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாதிருந்தாரே' என்று தேவாரத்தில் வருவதைக் காண்க. இது திருமகள் வழி பட்ட தலம். முத்தியை வழங்கும் தலம் இது. மனு நீதிகண்ட சோழ மன்னர் அரசாட்சி புரிந்த தலைநகர் இது. சிதம்பரம் திருக்கோயிலில் புதைக்கப் பெற்றிருந்த தேவாரப் பதிகங்களைக் கண்டெடுத்து அவற்றை ஏழு திருமுறைகளா க வு ம் , திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எட்டாம் திருமுறையாகவும், திருமாளிகைத் தேவர் பாடி அருளிய நான்கு திருவிசைப்பாக்களையும், சேந்தனார் திரு வாய் மலர்ந்தருளிச் செய்த மூன்று திருவிசைப்பாக்களையும், கருவூர்த் தேவர் பாடியருளிய பத்துத் திருவிசைப் பாக்களை யும், பூந்துருத்தி நம்பி காடநம்பி பாடியருளிய இரண்டு திரு விசைப் பாக்களையும், வேணாட்டடிகள் அருளிய ஒரு திருவிசைப்பாவையும், திருவாலியமுதனார் பாடியருளிய நான்கு திருவிசைப் பாக்களையும், புருடோத்தம நம்பி பாடியருளிய இரண்டு திருவிசைப் பாக்கசையும், சேதி ராயர் பாடியருளிய ஒரு திரு விசைப்பாவையும், சேந்தனார் பாடியருளிய திருப்பல்லாண்டையும் ஒன்பதாம் திருமுறை யாகவும், திருமூலர் பாடியருளிய திருமந்திரத்தைப் -பத்தாம் திருமுறையாகவும், திருவால வாயுடையார் பாடியருருளிய திருமுகப் பாசுரத்தையும் கரைக் கால் அம்மையார் பாடியருளிய திருவாலங்காட்டு முத்த திருப் பதிகம், மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணி மாலை, அற்புதத் திருவந்தாதி என்னும் நான்கையும், ஐயடிகள் காடவர் கோன் நாயனார் இயற்றிய rேத்திரத் திருவெண் பாவையும், சேரமான் பெருமாள் நாயனார் இயற்றியருளிய பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்
பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/16
Appearance