உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 215. மயக்கம். "அழகிய எனலும் ஆம். ப்:சந்தி. புகலி-புகலி யாகிய சீகாழியை. மன்னர் அவர்க்கு-ஆட்சி புரிந்தருளும் அரசராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய கனாருக்கு. மால்-திருமாலும். அயனும்-பிரம தேவனும், நேடி-பன்றியினுடைய வடிவத்தை எடுத்துக்கொண்டு நிலத் தைத் தோண்டித் தேடிப் பார்த்தும், அன்னப் பறவையினு டைய உருவத்தை எடுத்துக்கொண்டு மேலே பறந்து தேடிப் பார்த்தும். இன்னம் காணாதார்-திருவடிகளையும் திரு முடியையும் இன்னமும் பார்க்க முடியாதவராகிய வேதா ரணியேசுவரர். நேர்-தமக்கு நேரில். ஏ:அசை நிலை. காட்சி-தம்முடைய தரிசனத்தை. கொடுத்தருள-வழங்கி .யருள. ஆடல்-அந்தப் பெருமானாருடைய திரு நடனத்தை. .கண்டு-திருநாவுக்கரசு நாயனார் தரிசித்து. பணிந்து-அந்தப் பெருமா னாரைத் தரையில் விழுந்து வணங்கிவிட்டு. ஏத்திதுதித்துவிட்டு. அரசும்-திருநாவுக்கரசு நாயனாரும்: திணை மயக்கம். காண-தரிசிக்குமாறு. க்:சந்தி. காட்டுதலும். அந்த வேதாரணியேசுவரர் தம்முடைய திருவுருவத்தைத் தரிசிக்குமாறு காண்பித்தருளியவுடனே. பாட அடியார் - என்று- பாட அடியார் என. எடுத்து. பாட அடியார்’ என்று தொடங்கி. ப்:சந்தி. பரமர் தம்மை-பரமேசுவர ஆர்ாகிய அந்த வேதாரணியேசுவரரை. தம்:அசை நிலை. ப்:சந்தி. பா டி னா ர்-ஒரு திருப்பதிகத்தினால் அந்த தாயனார் பாடியருளினார். ; இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருத்தாண்டகம் திரு வாய்மூரைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடி ஆகுளியது. அந்தத் திருத்தாண்டகம் வருமாறு: " பாட அடியார் பரவக் கண்டேன் பத்தர்கணம் கண்டேன் மொய்த்த பூதம் ஆடல் முழவம் அதிரக் கண்டேன் அங்ண்க.அனல் கண்டேன் கங்கையாள்ைக்