உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 45 சேர்த்துக் கூறியது. காண்தகு-பார்க்கத் தகுதியைப் பெற்ற. மாளிகை-திருமாளிகைகளும்; ஒருமை பன்மை மயக்கம். மாடம்-மாடங்களும்; ஒ ரு ைம ப ன் ைம மயக்கம். கவின்-அழகினால். சி ற ந் து- சி ற ப் ைப அடைந்து. ஓங்கிட-உயரமாக நிற்க. எங்கும்-எல்லா இடங்களிலும்: ஒருமை பன்மை மயக்கம். ேச ண் - .ெ ந டு ந் துர ர த் திற்கு. திகழ்-ஒளியை வீசிக்கொண்டு விளங்கும். வீதிகள். திருவாரூரில் உள்ள திருவீதிகள். பொலிய-தோற்றப் பொவி வோடு. விளங்க, த்:சந்தி. திரு-செல்வம்; செல்வத்தைப் படைத்தவர்கள்’ எனலும் ஆம்; திணைமயக்கம். மலிமிகுதியாக உள்ள மங்கலம்-மங்கல காரியங்களை; ஒருமை பன்மை மயக்கம். அவையாவன: திருமணம் புரிதல், மண மாகிய பெண்மணிகளுக்குப் பூச்சூட்டுதல், இளைஞர்களுக்கு உபநயனம் செய்வித்தல், ருதுசாந்தி முகூர்த்தத்தை நடத்து தல், கருவுற்ற மகளிர்களுக்குச் சீமந்தம நடத்துதல், வளை களை அணிதல், குழந்தைகள் பிறந்த பிறகு புண்யாஹவாச னம் செய்தல் முதலியவை. செய்தார்.அந்த வீதிகளில் உள்ள திருமாளிகைகளிலும் மாடங்களிலும் வாழும் மக்கள் புரிந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். - பிறகு வரும் 219-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: வலிமையைப் பெற்ற சமணர்களாகிய இழிந்தவர்கள் புரிந்த மாய மந்திரங்களால் உண்டான துன்பத்தைத் தாண்டி அவைகள் சுருண்டு வீசும் சமுத்திரத்தில் தம்மை அந்தச் சமணர்கள் கட்டிவிட்ட கருங்கல்லே தெப்பமாக மாற அதன்மேல் ஏறிக் கொண்டு கரையை அடைந்தவர் நம்முடைய திருவாரூருக்கு எழுந்தருளினார் என்னும் மகிழ்ச்சியினால் கணக்கு இல்லாத திருத்தொண்டர்கள் அந்தத் திருநாவுக்கரசு நாயனாரை மதிலுக்கு வெளியில் போய் எதிர்கொண்டு வரவேற்ற சமயத்தில் வார்த்தை களுக்கு அரசராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தியாக ராஜப் பெருமானாரைப் பணிந்து தம்முடைய திருக்கரங்