உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம்-3 313 பொற்றுாண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் பொய்யாது பொழிலேழும் தாங்கி நின்ற கற்றுாண்காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காணவனென் கண்ணு ளானே.' அந்த நாயனார் திருஆமாத்துரைப் பற்றிப் பாடி அயருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: " வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக் கண்ணம்பால் நின்றெய்து கலைப் பேசிக் கடியதோர் விடையேறிக் கபாலி யார் சுண்ணங்கள் தாம்கொண்டு துதையப் பூசித் தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற அண்ணலார் போகின்றார் வந்து காணிர் அழகியரே ஆமாத்துTர் ஐய னாரே.” அந்த நாயனார் திருப்பந்தனை நல்லூரைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: " நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல்பூண்டார் நூல்மேலோர் ஆமை பூண்டார் பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப் பிறைகுடும் சடைமேலோர் புனலும் சூடி ஆதங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல்கொண்டார் அந்திவாய் வண்ணம் - கொன்டார் பாதங்க நீறேற்றார் பைங்கண் ஏற்றார் பலியேற்றார் பந்தனை நல்லூர ராரே." அந்த நாயனார் திருக்கழிப்பாலையைப் பற்றிப் பாடி பகுளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு: ' ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து தாமெடுத்த கூரை தவிரப் போவார் - தயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்